சென்னை பெருநகர மாநகராட்சியில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக விவரம் வருமாறு
சென்னை
சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 214 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, உறுதி செய்யப்பட்ட நபர்கள் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற மண்டலம் வாரியான விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 64 பேரும், திருவிக நகரில் 31 பேரும், கோடம்பாக்கத்தில் 24 பேரும், அண்ணாநகரில் 22 பேரும், தடையார்ப்பேட்டையில் 20 பேரும், தேனாம்பேட்டையில் 18 பேரும் உள்ளனர். மேலும், பெருங்குடி மற்றும் அடையாறில் 7 பேரும், வளசரவாக்கத்தில் 5 பேரும், திருவொற்றியூரில் 4 பேரும், மாதவரத்தில் 3 பேரும், ஆலந்தூரில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும் உள்ளனர்.
சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருக்கின்றனர்.
எனவே, இப்பகுதிகளில் 90 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வீடு வீடாக சோதனை செய்யப்படும் வரும் பணிகள் 95 சதவீதம் முடிவுற்று உள்ளன என்றும், இதுவரை 1,61,72,106 பேருக்கு அறிகுறிகள் பரிசோதனை செய்ததில் 749 பேருக்கு அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.எனவே, சென்னை மக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறும், வெளியே வரும்போது அவசியம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
மண்டலம் வாரியாக உறுதி செய்யப்பட விபரங்கள்:
திருவொற்றியூர் – 4
மணலி – 0
மாதவரம் – 3
தண்டையார்பேட்டை – 20
ராயபுரம் – 64
திருவிக நகர் – 31
அம்பத்தூர் – 0
அண்ணாநகர் – 22
தேனாம்பேட்டை – 18
கோடம்பாக்கம் – 24
வளசரவாக்கம் – 5
ஆலந்தூர் – 3
அடையார் – 7
பெருங்குடி – 7
சோழிங்கநல்லூர் – 2
Leave a Reply