ஊரடங்கு காலத்தில் சென்னையில் அனைத்து குற்றங்களும் 79% குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதனால் சென்னை மாநகரில் குற்றங்களும் பெருமளவில் குறைந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் கொலை வழக்கில் 44%, கொள்ளை வழக்கில் 75%, வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59% , திருட்டு வழக்கில் 81%, விபத்து சிறப்புகளில் 75% என ஒட்டுமொத்தமாக 79% அனைத்து குற்றங்களும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *