சென்னை : சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கவும் மருந்துகளை வழங்கவும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து இன்று(ஏப்.,3) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தொற்று பரவ கூடிய ஆபத்து நிறைந்த சூழல் இருப்பதால் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும் அரசு அறிவித்தது. இந்நிலையில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா தொற்று பரவியது கண்டறியப்பட்டது. இதனால் தமிழகத்தில் அது போன்ற அசம்பாவிதம் நடக்காமல் இருக்க நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் வழங்க ரோபோக்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக 3 வகையான ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அதை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு ரோபோ செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தார்.

பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் 500 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 100 படுக்கைகளில் வென்டிலேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 48 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 3 ரோபோக்கள் அறிமுகம் செய்துள்ளோம். இதன் பயன்பாடு மற்றும் செயல்திறனுக்கேற்ப அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். Propeller techno என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. திருச்சியிலும் 5 ரோபோக்கள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *