கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது பற்றி ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி, நேற்று ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் தொலைபேசியில் பேசினார். உலகளாவிய கொரோனா வைரஸ் பரவல் நிலை, அதனால் எழுந்துள்ள பொருளாதார சவால்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து பரஸ்பரம் இருவரும் தத்தமது நாடுகளில் எடுத்து வருகிற நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவி வருகிற நிலையில், அதற்கு தீர்வு காண்பதில் இந்தியாவும், ஜப்பானும் கூட்டாக செயல்பட்டு முக்கிய பங்காற்ற முடியும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளியுடனும் பிரதமர் மோடி, நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கள், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் பற்றி விரிவாக விவாதித்தனர்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தெற்காசிய நாடுகளுடன் பிரதமர் மோடி இணைந்து செயல்படுவதற்கு, கே.பி.சர்மா ஒளி பாராட்டு தெரிவித்தார். நேபாளத்துக்கு இந்தியா அளித்து வருகிற ஆதரவுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
Leave a Reply