கொரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதில் குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் வெற்றி கண்டு உள்ளனர்.
அகமதாபாத்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று 12,380 ஆக உயர்ந்தூள்ளது. இறப்பு எண்ணிக்கை 414 ஐ எட்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இந்தியாவில் திருப்புமுனையாக குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் (ஜிபிஆர்சி) விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதில் வெற்றி கண்டு உள்ளனர்.
குஜராத்தின் முதல் மந்திரி அலுவலகம் இந்த சாதனையை நிகழ்த்திய நாட்டின் முதல் மாநில அரசு ஆய்வக (ஜிபிஆர்சி) விஞ்ஞானிகளைப் பாராட்டி உள்ளது.
வைரசின் தோற்றம், மருந்து இலக்குகள், தடுப்பூசி மற்றும் வைரஸுடன் தொடர்பு கொள்வதில் முழு மரபணு வரிசை முக்கிய பங்கு வகிக்கும்.
குஜராத் முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள டுவிட்டில் கூறி இருப்பதாவது:-
“குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் (ஜிபிஆர்சி) விஞ்ஞானிகளுக்கு இந்த சாதனை பெருமை அளிக்கிறது, இது கொரோனா வைரசின் முழு மரபணு வரிசையையும் கண்டறிந்துள்ள ஒரே மாநில அரசு ஆய்வகமாகும், இது வைரசின் தோற்றம், மருந்து இலக்குகள், தடுப்பூசி மற்றும் வைரஸுடன் தொடர்பு கொள்ள உதவும் என கூறி உள்ளது.
ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் மரபணுவின் முழுமையான டி.என்.ஏ வரிசையை தீர்மானிக்க முழு-மரபணு வரிசைமுறை பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் உள்ள இரண்டு வகை வவ்வால்களில் கொரோனா வைரஸ்களைக் கண்டுபிடித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Leave a Reply