விரைவில் கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்படவில்லை என்றால், அமெரிக்காவில் 2022வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டி இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்
உலகம் முழுவதும் 19 லட்சத்து 97 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுவரையிலும் 4 லட்சத்துக்கு 78 ஆயிரத்து 425 பேர் குணமாகியுள்ளனர்.தற்போது அமெரிக்காவில் மட்டும் 6 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.
விரைவில் கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்படவில்லை என்றால், அமெரிக்காவில் 2022வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டி இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அறிவியல் ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் வெளியிட்டு உள்ள கட்டுரையில்
கூறப்பட்டு இருப்பதாவது:-
கோடைகாலத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிடும் என்பதில் இருந்து முற்றிலும் முரணானதாக உள்ளது.விரைவாக கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்படவில்லை என்றால், 2022ஆம் ஆண்டுவரை அமெரிக்கர்கள் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிப்பது அவசியம் என கூறப்பட்டு உள்ளது
பிற வைரஸ் கிருமிகள் வைத்தும் கொவிட்-19ன் அடிப்படை கொண்டு அடுத்த நிலையில் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.
அதில், அந்த வைரஸ் தொற்று ஒருவேளை 2022ஆம் ஆண்டிற்குள் மறைந்துவிடும். ஆனால் மீண்டும் 2024ஆம் ஆண்டுக்கு பின் பரவலாம் என்று அதில், ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், ஒருவேளை தற்போது நீடித்துவரும் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்தினால், கொரோனா வைரஸ் மீண்டும் நிச்சயம் வேகம் எடுக்கும்.
இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஹார்வர்ட் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.<
பேராசிரியரான டாக்டர் மார்க் லிப்ஸ்டிச் கூறும் போது நீண்ட அணுகுமுறை மூலம் மருந்து கண்டறிய வழிவகை செய்யலாம். ஆனால், அதற்கு நிச்சயம் அதிக காலம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
ரோபர் ரெட்பீல்டு என்ற நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் சமூக விலகல்தான், மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் மேலும், சமூக இடைவெளியை நாம் அதிகரிக்க முடிந்தால் வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply