லண்டன்: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ காரணமாக இருந்த சீனாவிடம் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிபதிகள் கவுன்சில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலை அணுகி உள்ளது
இது குறித்து சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் கூறுகையில் ‘ கொரோனாவை உலக அளவில் பரப்ப காரணமாக இருந்த சீனா உலக அளவில் மக்களிடையே மன அழுத்தத்தையும் சமூக பாதிப்பையும், உலக பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிப்பு அடைய செய்துள்ளது. இது தொடர்பாக சீனா உலக நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.உயிரியல் ஆயுதமாக கொரோனாவை உருவாக்கியதன் மூலம் சீனா சர்வதேச மனித உரிமை கவுன்சிலின் விதிமுறைகளை மீறி உள்ளது.’ இவ்வாறு கூறியுள்ளது.
மூத்த வழக்கறிஞரும் சர்வதேச நீிதிபதிகள் கவுன்சில் தலவர் அடிஷ் சி அகர்வாலா கூறுகையில், ‘கொரோனா வைரஸ் பரவ தொடங்கி 2 மாதங்கள் கழித்து சீனா அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டது. அதற்கிடையில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்த சீனர்கள் கொரோனா உலக அளவில் பரவ காரணமாகிவிட்டனர். கடந்த பிப்., 14ல் சீனாவின் வூகான் 2000 பேர் வரை பாதித்து 50 பேர் பலி்யான நிலையில் தான் சீனா கொரோனா குறித்து அறிக்கை வெளியிட்டது. அந்நகரில் மிகக் குறைந்த அளவில் மக்களிடம் பரவி பாதித்த வைரஸ் இன்று உலக நாடுகள் முழுவதும் பரவி உள்ளது. அடிப்படை ஆரோக்கியம் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது’ இவ்வாறு அவர் தெரிவித்தார்
Leave a Reply