தமிழகத்தில் கொரோனா சிகிச்சை முறைகளை வகுத்தளிக்க 19 டாக்டர்களை கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இதுகுறித்து தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனாவை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில், அதற்கான சிகிச்சை நெறிமுறைகளை வகுப்பது மற்றும் மருத்துவ நிர்வாக வசதிக்காக டாக்டர்களை கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு நியமித்து உத்தரவிடுகிறது.

சென்னை மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் ரகுநந்தன், முன்னாள் இயக்குனர் சி.ராஜேந்திரன், சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி துறைத் தலைவர் (மருந்து) ஹரிஹரன், பேராசிரியர் ஸ்ரீதர், கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் (மருந்து) பரந்தாமன், உதவி பேராசிரியர் சந்திரசேகர், கிருஷ்ணராஜசேகர் (ஓய்வு),

நெஞ்சக மருந்து நிறுவன இயக்குனர் மகாலிங்கம்(ஓய்வு), முன்னாள் இயக்குனர் சி.ரங்கநாதன், சென்னை அப்பல்லோ மருத்துவமனை சி.ராமசுப்பிரமணியன் (தொற்றுநோய் கட்டுப்பாடு), ராம்ராஜ்கோபால், பாபு ஆபிரகாம், ராம்கோபால்கிஷன் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையம் துறைத் தலைவர் சி.ராஜகிருஷ்ணன்,

வேலூர் சி.எம்.சி. துறைத் தலைவர் ஆபிரகாம் மேத்யூஸ், ஆனந்த் சகரியா, விழுப்புரம் மருத்துவக்கல்லூரி துறைத் தலைவர் (மருந்து) சிவகுமார், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி துறைத் தலைவர்(மருந்து) நர்மதா லட்சுமி, சென்னை விஜயா மருத்துவமனை கண்காணிப்பாளர் என்.பாபு ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

இந்த குழு, தமிழகத்தில் கொரோனா தொற்று பற்றி தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, அதை தடுப்பதற்கான கருத்துகளை அரசிடம் தெரிவிப்பார்கள்.

தொற்றுக்கு ஆளானவர்கள், தொற்று பற்றிய சந்தேகத்துக்கு ஆளானவர் ஆகியோருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகளை மேம்படுத்துவார்கள். வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு முறைகளை தொடர்ந்து கண்காணித்து, அவற்றை தமிழகத்தில் பயன்படுத்துவதற்கான வழிகாட்டிகளை தயார் செய்வார்கள்.

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், இந்த நிபுணர் குழுவின் வழிகாட்டுதலை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *