பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அங்கு ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்:

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

பாகிஸ்தானில் கொரோனோவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அங்கு ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அங்கு ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், மார்க்கெட் பகுதிகள் உள்ளிட்டவை அடுத்த இரு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *