தமிழகமெங்கும் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை,

கொரோனா கிருமி தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகளின் பட்டியலை ஏற்கனவே மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டு இருந்தது.

இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சில தனியார் மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து, அங்கு கொரோனாவுக்கான சிகிச்சை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அரசு மருத்துவமனைகளின் பட்டியலை ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. மேலும், அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமையக மருத்துவமனைகள் மற்றும் முக்கிய மாவட்ட தாலுகா மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட சில மக்களும், நோயாளிகளும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்புவதாக அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில், சில தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் பட்டியலில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.

எனவே தனியார் மருத்துவமனைகளை நாட விரும்பும் நோயாளிகள், அரசு அறிவிக்கும் மருத்துவமனைகளுக்கு சென்று தங்கள் சொந்த செலவில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மத்திய அரசு நிர்ணயித்துள்ள சிகிச்சை முறைகளை அந்த தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தினமும் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குனரிடம் தனியார் மருத்துவமனைகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளின் பட்டியலில் அவசரத்துக்கு ஏற்ப மாற்றங்களை மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனர் அவ்வப்போது மேற்கொள்வார்.

மாவட்டமும், மருத்துவமனையும்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் வருமாறு:-

காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சேலையூர் பாரத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவூர் மாதா மருத்துவமனை.

எனாத்தூர் மீனாட்சி மருத்துவமனை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை, பூந்தமல்லி பனிமலர் மருத்துவமனை, தண்டலம் சவீதா மருத்துவமனை, அம்மாபேட்டை ஸ்ரீசத்யசாய் மருத்துவமனை, குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவமனை, மாங்காடு ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவமனை, காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவமனை.

திருவொற்றியூர்

கேளம்பாக்கம் செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, குரோம்பேட்டை டாக்டர் ரேலா மருத்துவ மையம் மற்றும் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் வேலப்பன்சாவடி ஏ.சி.எஸ். மருத்துவமனை, டாக்டர் மேத்தா மருத்துவமனை, போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை, திருவொற்றியூர் சுகம் மருத்துவமனை, ஆகாஷ் மருத்துவமனை, அயனம்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனை.

சென்னை சி.எஸ்.ஐ. கல்யாணி பொது மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, மணப்பாக்கம் மியாட் மருத்துவமனை, வடபழனி விஜயா மருத்துவமனை, பெருங்குடி ஜெம் மருத்துவமனை, பள்ளிக்கரணை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *