உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசில் இருந்து சில நாடுகள் தப்பித்துள்ளன. அந்த நாடுகளில் வைரசுக்கு இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

ஜெனிவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

உலகம் முழுவதும் 16 லட்சத்து 80 ஆயிரத்து 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 5 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 49 ஆயிரத்து 814 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரத்து 587 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 762 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சில நாடுகள் தப்பியுள்ளன. பெரும்பாலும் தனித்தனி தீவுகளாக உள்ள அந்த நாடுகளில் வைரஸ் பரவி இருந்தாலும் இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

கொரோனா பரவி இருந்தாலும் உயிரிழப்புகளை சந்திக்காத நாடுகள்/தீவுகள் மற்றும் பகுதிகள் வருமாறு:-

1) ரியூனியன்
2) வியட்நாம்
3) கயானா
4) ஃபரியோ தீவுகள்
5) கிப்ரல்டர்
6) கம்போடியா
7) ரவண்டா
8) மடகாஸ்கர்
9) அருபா
10) பிரெஞ்சு கயானா
11) உகாண்டா
12) பிரெஞ்சு பாலினிசியா
13) மெக்கோ
14) கயானா பிசயூ
15) எரிட்ரியா
16) மோசாம்பிக்யூ
17) மாலத்தீவுகள்
18) ஈக்வடொரியல் கயானா
19) நியு கல்டோனியா
20) டோமினிகா
21) பிஜி
22) லஓஸ்
23) மங்கோலியா
24) நமீபியா
25) செயிண்ட் லூசிகா
26) கிரினடா
27) செயின் வின்செண்ட் கிரேனெடினெச்
28) ஈஸ்வட்னி
29) சாட் குடியரசு
30) கிரீன்லாந்து
31) செயிண்ட் கிட்டிஸ் மற்றும் நிவிஸ்
32) செசில்ஸ்
33) நேபாளம்
34) மொன்செரட்
35) மத்திய ஆப்ரிக்க குடியரசு
36) சியாரா லியோன்
37) செயிண்ட் பெர்த்
38) பூட்டான்
39) பிலாக்லாந்து தீவுகள்
40) சா டோமி மற்றும் பிரின்சிபி
41) தெற்கு சூடான்
42) மேற்கு சஹாரா
43) அகுயிலா
44) பிரிட்டிஷ் வெரின் தீவுகள்
45) புருன்டி
46) கரீபியன் நெதர்லாந்துஸ்
47) பப்புவா நியூகினினா
48) டைமூர் டெஸ்டி
49) செயிண்ட் பெர்ரி மியூலான்

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *