பீஜிங்: சீனாவில் கொரோனா வைரசுக்கு 95 போலீசார் 45 மருத்துவ ஊழியர்கள் பலியாகி உள்ளதாக சீன நாட்டின் அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இதனையடுத்து வைரஸ் சிகிச்சையை குணப்படுத்த தீவிரம் காட்டி வந்தது.சீன அரசு. இதற்காக 42 ஆயிரம் மருத்துவ ஊழியர்களை களம் இறக்கப்பட்டனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 14 தற்காலிக மருத்துவமனைகளை கட்டியது.
வூஹான் மாகாணத்தில் 812639 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 3,326 பேர் பலியானதாகவும் சீன அரசு கூறியது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போது 3,000 மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்று பரவி இருப்பதாக சீன அரசு கூறி வந்தது. மார்ச் 15ம் தேதி நிலவரப்படி குறைந்தது 46 மருத்துவர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர் என சீன அரசு நடத்தி வரும் குளோபல் டைம்ஸ் தெரிவித்தது. தொடர்ந்து வூஹான் மாகாணத்தில் வைரஸ் தொற்று நீங்கியதாக சீன அரசு அறிவித்தது. இதனையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த மருத்துவர்கள் செவிலியர்கள் அனைவரும் தங்களின் சொந்த இருப்பிடத்திற்கு திரும்பினர்.
கடந்த வியாழக்கிழமையன்று 60 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 35 உதவி போலீஸ் அதிகாரிகள் தங்களின் உயிரை தியாகம் செய்து உள்ளாதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் சீனா பாதுகாப்புத்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டன.இந்நிலையில் சீன அரசு கொரோனா வைரசால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு தழுவிய துக்கத்தை கடைபிடித்தது. தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. அப்போது கொரோானா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் 95 போலீசார் மற்றும் 46 மருத்துவ ஊழியர்கள் பலியானது வெளியே தெரிய வந்துள்ளது.
Leave a Reply