குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிறந்து 14 மாதங்களே நிரம்பிய பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது.
குஜராத்: பிறந்து 14 மாதமே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவுக்கு பலி – அதிர்ச்சி சம்பவம்
அகமதாபாத்:
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 4789 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் ஜம்நகர் மாவட்டத்தை ஒரு தம்பதியின் 14 மாத பச்சிளம் ஆண் குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
அந்த குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நேற்று முன்தினம் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதை கண்டுபிடித்தனர்.
மேலும், குழந்தையின் பல்வேறு உடல் உறுப்புகள் தொடர்ந்து செயலிழந்து வந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் குழந்தைக்கு செயற்கை சுவாசக்கருவி பொறுத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், இரண்டு நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த 14 மாத பச்சிளம் குழந்தை இன்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் குழந்தையின் பெற்றோர், டாக்டர்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் பிறந்து 14 மாதங்களேயான பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளதால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.
Leave a Reply