சென்னை: மானியமில்லாத கேஸ் சிலிண்டர் சிலிண்டர் விலை தொடர்ந்து 2வது மாதமாக குறைந்துள்ளது. சென்னையில் ரூ.64.50 விலை குறைந்துள்ளது.
தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 கேஸ் சிலிண்டர் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன், இந்தியா முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து 2வது மாதமாக மானியம் இல்லாத சிலிண்டரின் விலை குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் கேஸ் சிலிண்டர் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.
2 மாதங்களில் 2வது முறையாக
கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த மானியமில்லாத சிலிண்டர் விலை கடந்த மார்ச் மாதம் குறையத்தொடங்கியது. அதன்படி சென்னையில் இன்று (ஏப்.,01) முதல் மானியமில்லாத கேஸ் சிலிண்டர் சிலிண்டர் விலை 64.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மார்ச் மாதம் ரூ.826 ஆக விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை, ரூ.761.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டில்லியில் ரூ.744, கோல்கட்டாவில் ரூ.774.50, மும்பையில் ரூ.714.50 விலையில் கிடைக்கின்றன.
Leave a Reply