காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் – சிஆர்பிஎப் வீரர் மரணம்
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பேஹரா பகுதியில் சிஆர்பிஎப் மையம் செயல்பட்டு வருகிறது. இன்று மாலை அப்பகுதியில் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள் அந்த மையத்தில் இருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கிருந்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
Leave a Reply