கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டி 11,591 ஆக உள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. சீனாவில் தொடங்கி 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளைப் பாதித்துள்ள கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இத்தாலி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கரோனா வைரஸ் நோயத் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை பாதித்தோரின் எண்ணிக்கை 1,01,739 ஆக உள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டி 11,591 ஆக உள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் 812 பேர் பலியாகியுள்ளனர்.

உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்தைத் தாண்டி அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *