து தில்லி: தமிழகத்தில் புதிதாக 102 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,300 ஆகவும், உயிர் பலி 56 ஆகவும் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 336 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி மாநாட்டில் பங்கேற்ற 14 மாநிலங்களைச் சேர்ந்த 647 பேருக்கு இதுவரை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மேலும் 182 (132 அரசு மற்றும் 52 தனியார்) பரிசோதனைக் கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 8 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தில்லியில் புதிதாக 91 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு கரோனா பாதிப்பு 384 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ராணுவத்தில் பணியாற்றியவர்கள், தனியார் மருத்துவமனையில் பணியாற்றியவர்கள் என நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரம் மருத்துவர்கள் தாமாக முன் வந்து கரோனாவுக்கு எதிரான போரில் அரசுடன் கைகோர்க்க உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply