கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தையும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆண்டாள் அழகா் பொறியியல் கல்லூரியையும் அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என தேமுதிக தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரோனாவிற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆண்டாள் அழகா் பொறியியல் கல்லூரியையும், சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தமிழக அரசைக் கேட்டு கொள்கிறேன்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வாா்டுகளில் வசிக்கும் தேமுதிக நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் அத்தியாவசியப் பொருள்களான உணவு, காய்கறி, உடை, மருந்து, முகக்கவசம் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்க வேண்டும். துப்புரவுப் பணியாளா்களுக்கும் தேவையான உதவியை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
Leave a Reply