இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களை ஆண்ட பிரிட்டிஷாரை இப்போது ஆண்டுகொண்டிருப்பவர்கள், நம்ப மாட்டீர்கள், இந்தியர்கள்தான்!
கரோனாவால்தான் காலம் இப்படியும் மாறியிருக்கிறது.
என்ன இது அபத்தமாக இருக்கிறது என்று பதற்றமடைந்துவிட வேண்டியதில்லை, சேதி இதுதான்!
பிரிட்டனின் பிரதமரான போரிஸ் ஜான்சனுக்குக் கரோனா நோய்த் தொற்று. தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் அவர் எல்லாவற்றையும் காணொலி வாயிலாகத்தான் செயல்படுத்த வேண்டிய நிலையிலிருக்கிறார்.
அண்மையில் கரோனா பாதித்தவர்களுடன் கையைப் பிடித்தெல்லாம் குலுக்கிக் கொண்டிருந்தார் ஜான்சன். அதைப் பார்த்துப் பலரும் விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
சரி, கரோனா நோய்த் தொற்று விஷயங்களைக் கையாளும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாட் ஹான்காக்கிற்கும் இப்போது கரோனா தொற்று.
பிரதமர் போரிஸ் ஜான்சன் தனித்திருக்கப் போவதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே தமக்கும் தொற்று இருப்பதாகவும் தனிமைப்படுத்திக் கொள்வதாகவும் அவர் அறிவித்தார். எனவே, அவரும் உள்ளே.
அப்படியென்றால் வெளியே…
பிரதமருடன் இணைந்து செயல்படக்கூடிய, வெளியே இருந்து செயல்படுகிற அதிகாரம் மிக்க அமைச்சர்களில் இருவர் இந்திய வம்சாவளியினர், ரிஷி சுனக், பிரீத்தி சுசீல் படேல்.
ஜான்சன் அமைச்சரவையில் நிதித் துறை அமைச்சராக இருப்பவர் ரிஷி சுனக், இவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன். உள்துறை அமைச்சராக இருப்பவர் பிரீத்தி சுசீல் படேல் என்ற பெண்மணி.
ஆள்கிறார்கள் பிரிட்டிஷாரை!
ஆல் கரோனா டைம்!!
Leave a Reply