பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் 12 லட்சம் பேருக்குத் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது.
மும்பை,
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே மராட்டிய மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மராட்டிய தலைநகரான மும்பையிலும் கொரோனா வைரசின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது.
மராட்டிய மாநிலத்தில் மேலும் 328 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 3,648 ஆக அதிகரித்துள்ளது. இதில் மும்பையில் அதிக அளவாக 184 பேருக்கும், புனேவில் 78 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் கொரோனா வைரசின் பரவலைத் தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வந்தனர். இந்நிலையில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் 12 லட்சம் பேருக்குத் தலா இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Leave a Reply