சென்னை: தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் தடையை மீறி வெளியில் சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது, 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த காலகட்டத்தில், 1,06,539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.45,13,544 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply