உலக அளவில் கொரோனாவுக்கு 1.41 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

பாரீஸ்,

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்தை கடந்தும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலும், பலியிலும் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. அங்கு 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ஸ்பெயினை பொறுத்தமட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவில் 2 லட்சத்தை எட்டும் நிலை உள்ளது. 19 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொரோனா பலி வாங்கியுள்ளது.

இங்கிலாந்தில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டிவிட்டது. அங்கு பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆயிரத்து 300-ஐ கடந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3,300-ஐ தாண்டியுள்ளது. இங்கு சுமார் 77 ஆயிரத்து 900 பேர் குணம் அடைந்துள்ளனர். ஐரோப்பாவில் மொத்தம் 10 லட்சத்து 47 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ள இந்த வைரஸ், 90 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோர் உயிரை பறித்தும் உள்ளது.

ஆசியாவில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் தாக்கியுள்ள நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 5,300-ஐ தாண்டியுள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *