கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் சேவை பெருமை அளிக்கிறது என ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது.

இஸ்லமாபாத்,

கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் சேவை பெருமை அளிக்கிறது என ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவி வரும் இந்த நேரத்தில் மக்களையும், நிவாரண பொருட்களையும், உலகளாவிய அளவில் கொண்டு சென்று சேவைபுரிந்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஏர் இந்தியாவின் சேவையை பாகிஸ்தானும் தற்போது பாராட்டியுள்ளது.

ஏப்ரல் 2-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் மும்பையிலிருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட்டுக்கு, நிவாரண பொருட்கள் அடங்கிய இரண்டு விமானங்களை இயக்கியது. மும்பையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் பாகிஸ்தானின் வான்வெளியில் நுழைந்து, அந்நாட்டின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டது.

அப்போது, ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அவர்கள், ஏர் இந்தியா நிவாரண விமானத்தை வரவேற்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் விமானத்தை இயக்குவது எங்களுக்கு பெருமையளிக்கிறது. எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *