இந்திய கடற்படையை சேர்ந்த 21 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

இந்திய கடற்படையை சேர்ந்த 21 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

மும்பையில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் பணியாற்றி வரும் 21 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு உள்ள ஒரு கடற்படை மருத்துவமனையில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது கடற்படையில் பதிவாகும் கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் தொகுப்பு ஆகும். அந்த வீரர்களுடன் தங்கியிருந்த சக வீரர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணி நடைபெறுகிறது.

மேற்கு கடற்படை தளத்தில் உள்ள குடியிருப்பு விடுதிகளில் மாலுமிகள் தங்கியிருந்தனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வந்து உள்ளனர். 21 வீரர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதும், அங்கு தங்கியிருந்த அனைவரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலரது பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டி உள்ளது. எனவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *