கொரோனாவுக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு இந்திய அனைத்து விதத்திலும் உதவும் என்று ட்விட்டரில் பிரதமர் மோடி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்தது. இதையடுத்து, பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
டொனால்டு டிரம்பின் டுவிட்டுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- இது போன்ற தருணங்கள்தான் நட்பை வலுப்படுத்துகின்றன. இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு முன்பை விட வலுவானதாகியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் மனிதகுலத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். நான் ஒன்றுபட்டு வெற்றி பெறுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
Leave a Reply