இந்தியாவில் 170 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு உள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகள் – சுகாதாரத்துறை
சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்
புதுடெல்லி:
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா பரவும் மைய இடங்களாக விளங்கும் பகுதிகளை கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகள் எனவும், கொரோனா பாதிப்பு ஏற்படாத பகுதிகளை கொரோனா நான் ஹாட்ஸ்பாட் பகுதிகள் எனவும் மாவட்டங்களை நாங்கள் வரிசைப்படுத்தியுள்ளோம். இதன்படி, 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
207 மாவட்டங்கள் சாத்தியமான ஹாட்ஸ்பாட்கள் / ஹாட்ஸ்பாட்கள் அல்லாதவை என்று அடையாளம் கண்டுள்ளோம். நாட்டில் கொரோனா தொற்று இன்னும் சமூக பரவலாக மாறவில்லை. உள்ளூரில் சில பரவல் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் உத்திகளை அமல்படுத்துவதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
Leave a Reply