அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்வதற்கு மூன்று விதமாக, மூன்று வண்ணங்களில் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரியலூர் மாவட்டத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வெளியில் வர அனுமதி
அரியலூர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கை காரணமாக இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்வதற்கு மூன்று விதமாக, மூன்று வண்ணங்களில் (பச்சை, ஊதா, ரோஸ்) பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி பச்சை நிற பாஸ் திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டும் பயன்படுத்த முடியும். அந்த அனுமதி அட்டையினை பொதுமக்கள் வெளியே கொண்டு சென்று பொருட்களை வாங்கி வரலாம்.
ஊதா நிற பாஸ் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பயன்படுத்த முடியும். ரோஸ் நிற பாஸ்களை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த அனுமதி சீட்டுகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செல்லும். இந்த கார்டு மூலம் மருத்துவ அவசரத்திற்கு விதி விலக்கு அளிக்கப்படும். இந்த சீட்டை வைத்திருக்கும் ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதி அளிக்கப்படும். 15 வயதிற்கு மேல் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே இந்த அட்டையை பயன்படுத்தி வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த அட்டைகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் லாரிகளில் அத்தியாவசிய மற்றும் வேளாண் பொருட்கள் எடுத்துச் செல்ல வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனுமதி கடிதம் பெறவேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
இது திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மதியம் 1 வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மற்ற நாள்களில் மருத்துவ பணிக்கு விலக்கு அளிக்கப்படும்.
மேலும், லாரியின் ஓட்டுநருக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் கண்டிப்பாக அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் ஒருவருடன் உதவியாளர் ஒருவர் செல்ல அனுமதி உண்டு. அதேபோல் எங்கு சென்றாலும் சமூக விலகலை அனைவரும் அவசியம் பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply