அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடெனுக்கு, முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான மாகாணவாரி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கும், செனட் சபை உறுப்பினர் பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
ஆனால் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக பெர்னி சாண்டர்ஸ் கடந்த வாரம் அறிவித்தார். இதனால் ஜோ பிடென் ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் டிரம்பை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடெனுக்கு, முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கொரோனா தொற்றுடன் போராடி வரும் அமெரிக்காவை குணப்படுத்தி இருளில் இருந்து மீட்கும் தகுதி, ஜோ பிடெனுக்கு உள்ளதாக ஒபாமா நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக ஒபாமாவின் பதவி காலத்தில், ஜோ பிடென் துணை ஜனாதிபதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply