எச்-1பி விசா தொடர்பான விதிகளை தளர்த்தி, அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் வேலை இழந்தாலும் 8 மாதங்கள் வரை தங்கியிருக்க அமெரிக்கா அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து வருகின்றன. அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழக்கும் பட்சத்தில் அடுத்த 60 நாட்களுக்குள் புதிய வேலை தேடிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களது விசா காலாவதியாகி விடும் என்ற விதிமுறை உள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் எச்-1பி விசாவில் அமெரிக்காவில் பணிபுரியும் பெரும்பாலான இந்தியர்களின் நிலை கேள்வி குறியாகி உள்ளது.

இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் அர்ஸ் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரியிடம் பேசினார். இதற்கிடையே எச்-1பி விசா காலாவதி காலம் நீடிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதன்படி எச்-1பி விசா காலம் முடிவடைவது தொடர்பான விதிகளை தளர்த்தி அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் வேலை இழந்தாலும் 8 மாதங்கள் வரை தங்கியிருக்க அமெரிக்கா அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

எச்-1பி விசாவில் பணிபுரிபவர்கள் பெருபாலானவர்கள் இந்தியர்கள். தற்போது விசா காலம் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் நிம்மதி அடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *