நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 50 ஆயிரம் பேர் பலியாவார்கள் என டாக்டர் ஒருவர் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நியூயார்க்:
அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். அங்கு பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கணித்துள்ளனர். இந்நிலையில், நியூயார்க் ஆஸ்பத்திரி ஒன்றில் பணியாற்றும் டாக்டர் மர்லின் கேப்லன் என்பவர், நியூயார்க் மாகாணத்தில் 50 ஆயிரம்பேர் பலியாவார்கள் என்று கணித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “நியூயார்க் மாகாணத்தில் கொரோனாவின் உச்சம் இப்போதுதான் தொடங்கி உள்ளது. அல்லது, விரைவில் தொடங்கும் என்று கருதுகிறேன். எனவே, 16 ஆயிரம்பேர் பலியாவார்கள் என்பதை ஏற்க முடியவில்லை. அதைப்போல் 3 மடங்கு, அதாவது சுமார் 50 ஆயிரம்பேர் பலியாவார்கள் என்று கருதுகிறேன்” என்றார்.
Leave a Reply