அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ அல்லது பதுக்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நல வாரிய உறுப்பினர்களுக்கு விலையில்லா நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் கட்டுமான தொழிலாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் நல வாரிய உறுப்பினர்களுக்கு விலையில்லா நிவாரணப் பொருட்களை வழங்கி அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மே மாதத்திற்கான அரிசி, பருப்பு, ஆயில் உள்ளிட்ட பொருட்களை விலையில்லாமல் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி ஒரு நாளைக்கு 150 டோக்கன் வீதம் வழங்கப்பட உள்ளது. இது குறித்து முதல்வர் அறிவித்த உடன், அந்த தேதியில் இருந்து பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் ஆகியோர்களுக்கு 15 கிலோ அரிசி மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த பணியானது இன்று திருவாரூரில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 29,000 பேர் பயனடைய உள்ளார்கள்.

அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ அல்லது பதுக்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் எனவும் தெரிவித்தார்.

விவசாய பணிகளில் ஈடுபடுவோருக்கு எவ்வித பிரச்சனையும் கிடையாது அவர்களுடைய அங்கீகார கடிதத்துடன் அவர்கள் பணிக்கு செல்லலாம் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் டி.ஜெயராமன், வருவாய் கோட்டாட்சியர் ஜெயபிரீத்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபால், திருவாரூர் கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *