அத்தியாவசிய சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி வழங்குவது யார் என்று அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தொழில்துறை முதன்மை செயலாளர், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை முதன்மை செயலாளர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தொழிற்சாலைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட தொழில்களுக்கு அத்தியாவசியமான பணியாளர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான அனுமதி உத்தரவை சென்னை தவிர மற்ற மாவட்ட கலெக்டர்களின் தனி செயலாளர்கள் (பொது) வழங்கலாம்.

சென்னையில் மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) அதற்கான அனுமதி உத்தரவை வழங்கலாம்.

இவர்கள் தவிர தொழில் வளர்ச்சி கழகத்தின் பொது மேலாளர், சிறு தொழிற்சாலைகளின் மண்டல தொழில் இயக்குனர் ஆகியோர் சென்னையில் இதற்கான அனுமதி உத்தரவை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்ட கலெக்டர்கள் அல்லது சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் இதற்கான தகவலை அளிக்க வேண்டும். மேலும், சப்-கலெக்டர்கள் மற்றும் வருவாய் கோட்ட அதிகாரி ஆகியோருக்கும், அவர்களுடைய அதிகார எல்லைக்குள் அனுமதி உத்தரவை வழங்க அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *