NadarToday News
-
நியூசிலாந்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தனது குடும்பத்துடன் கடற்கரையில் காரில் உலா வந்த சுகாதாரத்துறை மந்திரி டேவிட் கிளார்க் இணை சுகாதாரத்துறை மந்திரியாக பதவியிறக்கம் செய்யப்பட்டார். ஊரடங்கு உத்தரவை மீறியதால் நியூசிலாந்து சுகாதாரத்துறை மந்திரி பதவியிறக்கம் டேவிட் கிளார்க் வெலிங்டன்: நியூசிலாந்தில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் 25-ந்தேதி அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. …
-
வாஷிங்டன்: ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்யவில்லை எனில் அதற்கான விளைவை இந்தியா சந்திக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், தற்போது, மோடி கிரேட், ரியலி குட் என பாராட்டியுள்ளார். உலகளவில் 70 சதவீத ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து உற்பத்தி இந்தியாவில் தான் செய்யப்படுகிறது. இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது. மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று …
-
புதுடில்லி: உலக தொழிலாளர்கள் அமைப்பு இன்று (ஏப்., 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள, ஊரடங்கு உத்தரவால் உலகம் முழுக்க 270 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 கோடி இந்திய முறைசாரா தொழிலாளர்கள், வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளது. மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸால், ஏற்கனவே லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியா, நைஜீரியா, பிரேசில் ஆகிய நாட்டின் தொழிலாளர்கள் …
-
புதுடில்லி: அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு, ஜெயிர் போரல்செனரோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடவுள் ராமரின், சகோதரரான லட்சுமணரை காப்பாற்ற, கடவுள் அனுமன், இமயமலையில் இருந்து புனித மருந்தை எடுத்து வந்தார். அதேபோல, இயேசு, நோயுள்ளவர்களை, தன் ஆற்றலால் குணப்படுத்தினார். தற்போது கொரோனாவால், …
-
புதுடில்லி: ஏப்.,14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகள் பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் குறித்து பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் முறையில், எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனைகள், பரிந்துரை வழங்கினர். ஊரடங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொருவரின் உயிரை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலகமே, கடுமையான …
முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்றுநிலையை அடைந்துவிட்டதா? – சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்று நிலையை அடைந்து விட்டதா என்பது கட்டுப்படுத்துதல் திட்டம் முடிந்த பின்னரே தெரியவரும்…
அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் 8-ந் தேதி நடக்கிறது; எடப்பாடி பழனிசாமிக்கு, பிரதமர் மோடி அழைப்பு
அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 8-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி…
மோடியிடம் உதவி கேட்ட டிரம்ப் – ‘கொரோனா சிகிச்சைக்கான மருந்தை அமெரிக்காவுக்கு வழங்குங்கள்’
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யுமாறு பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டுக் கொண்டார்.…
ரஷியாவில் பயங்கரம்: சத்தமாக பேசியதால் 5 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர்
ரஷியாவில் வாலிபர் ஒருவர், சத்தமாக பேசியதால் 5 பேரை சுட்டுக்கொன்றார். மாஸ்கோ, ரஷியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.…
கொரோனா வைரசுக்கு நியூயார்க் மாகாணத்தில் 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் சாவு
நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 2½ நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர். வாஷிங்டன், அமெரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள்…
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 65 ஆயிரத்து 605 ஆக உயர்ந்து உள்ளது. புதுடெல்லி, சீனாவில் இருந்து…