NadarToday News
-
நியூயார்க்: ஊரடங்கு பலன் அளிக்க தொடங்கியதன் காரணமாக, நியூயார்க் மாகாணத்தில் கடந்த புதன் முதல் நேற்று வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், புதிய ஐ.சி.யூ சேர்க்கைகளும் குறைய ஆரம்பித்துள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான நியூயார்க் மாகாண போரில், வெற்றிக்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. புதிதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 200 ஆக குறைந்தது. இது கொரோனா தாக்கம் தொடங்கியதிலிருந்து மிகக் குறைவான எண்ணிக்கை என கவர்னர் கியூமோ கூறினார். …
-
புதுடில்லி: உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள் இன்று புனித வெள்ளி தினத்தை கொண்டாடுகின்றனர். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் மோடி கிறிஸ்தவ மக்களுக்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ‘இயேசு மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது தைரியமும் நேர்மையும் தனித்து நிற்கின்றன. அவரது நீதி உணர்வும் அவ்வாறே இருக்கிறது. இந்த புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை, நீதிக்கான அவரது அர்ப்பணிப்பையும் நினைவு கொள்வோம்.’ …
-
சென்னை: தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் தடையை மீறி வெளியில் சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது, 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில், 1,06,539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.45,13,544 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் …
-
துடில்லி: இந்தியாவில் கடந்த மார்ச் 30ம் தேதி, சுமார் 2 கோடியே 19 லட்சம் மின்னணு பரிவர்த்தனைகளை மத்திய அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், மார்ச் 24 முதல் ஏப்.,14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் மாதத்துடன் நிதியாண்டு நிறைவடைவதால், அம்மாதத்தின் கடைசி வாரத்திலும், ஏப்ரலில் முதலிரண்டு வாரங்களிலும் மத்திய அரசு அதிகாரிகளால் பல்வேறு நலத்திட்டங்களுக்கும், பயனாளிகளுக்கும் மின்னணு பரிவர்த்தனை மூலம் நிதி அனுப்பப்படும். அந்த வகையில் மார்ச் …
-
பெர்லின்: உலக நாடுகள் கண்டறிந்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுகள் எண்ணிக்கை வெறும் 6% தான் என்றும், உலகளவில் தொற்று ஏற்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை கோடிகளை தாண்டும் என ஜெர்மன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அதிர்ச்சி ஊட்டுகின்றனர். இன்றைய (ஏப்.,10) நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது. 3.5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், ‘லான்செட் தொற்றுநோய்கள்’ என்ற மருத்துவ சஞ்சிகையில் வந்த தகவல்களை …
முக்கிய செய்திகள்
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது – சர்வதேச அமைப்பு பாராட்டு
கொரோனா வைரசுக்கு எதிராக கொள்கை வகுத்து நடவடிக்கை எடுப்பதில் இந்தியா சரியான திசையில் செல்கிறது என்று சர்வதேச அமைப்பு பாராட்டு…
ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும் கொரோனா சிகிச்சைக்கு புதிய டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் – மத்திய அரசு திடீர் முடிவு
கொரோனா வைரஸ் சிகிச்சையில் புதிய டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர் களை ஈடுபடுத்தவும், அவர்களுக்கு ஆன் லைனில் பயிற்சி அளிக்கவும்…
கொரோனா வைரஸ் பாதிப்பால் ரெயில்கள் சரக்கு ஏற்றிச்செல்லும் வருமானம் ரூ.2,125 கோடி இழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் ரெயில்கள் சரக்குகளை ஏற்றிச்செல்வதற்கான வருமானம் ரூ.2,125 கோடி அளவுக்கு குறைந்து விட்டது. புதுடெல்லி, உலக நாடுகளை…
ஆய்வுக்கூடங்களில் கொரோனாவை கண்டறிய இலவச பரிசோதனை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி, கொரோனோ வைரஸ் பரிசோதனைக்காக தனியார் ஆய்வகங்கள் வசூலிக்கும் கட்டணம் தொடர்பாக சஷாங் தியோ சுதி என்ற வக்கீல் சுப்ரீம்…
14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை
தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதற்கான ஆணையை அரசு பிறப்பித்து உள்ளது. 14.7 லட்சம்…
ஊரடங்கு உத்தரவு அமல் : 21-ந் தேதிக்கு முன்பாக எங்கும் நகர வேண்டாம் – எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிரடி உத்தரவு
ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக எல்லை பாதுகாப்பு படையினர், வருகிற 21-ந் தேதிக்கு முன்னதாக எங்கும் நகர வேண்டாம் என்று அதிரடி…