ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மத்திய அரசு

நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி, கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. …

பிரதமர் நிவாரண நிதிக்கு பங்களிக்கும் நிறுவனங்களுக்கு சலுகை

புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிவாரண நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு, கம்பெனிகளின் சட்டங்களின் கீழ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கான பிரிவில் செலவிட்டதாக கருதப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமர், மோடி, வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, ஏராளமான பிரபலங்கள், நிறுவனங்கள் தாராளமாக நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதியை அதிகரிக்க, மத்திய …

தொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடில்லி: இடம் பெயர்ந்து பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் ஒருமாதம் வாடகை வாங்கக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இதனால் பிற மாநிலங்களுக்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பல தொழிலாளர்கள் நடைப்பயணமாக சொந்த ஊர் திரும்புகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் …

மூன்றாம் உலகப் போர் “கரோனா’!

” கரோனா என்னும் மூன்றாம் உலகப்போரை எதிர்த்து நடக்கும் இந்த யுத்தத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் காப்பீடு வரவேற்கத்தக்கது. பணியின்போது அவர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். ” கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பது எப்படி? இந்நோய்க்கு எப்படி வைத்தியம் செய்வது? இதனால் எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படப் போகின்றன என்பதையெல்லாம் அறிய முடியாமல் மிகப் பெரிய கலக்கத்திலும், பேரச்சத்திலும் மக்கள் ஆழ்ந்திருக்கிற நேரமிது. ஏற்கெனவே, கரோனா நோய்த்தொற்று 190-க்கும் …

கரோனா காலம்: பிரிட்டிஷாரை ஆளும் இந்தியர்கள்!

இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களை ஆண்ட பிரிட்டிஷாரை இப்போது ஆண்டுகொண்டிருப்பவர்கள், நம்ப மாட்டீர்கள், இந்தியர்கள்தான்! கரோனாவால்தான் காலம் இப்படியும் மாறியிருக்கிறது. என்ன இது அபத்தமாக இருக்கிறது என்று பதற்றமடைந்துவிட வேண்டியதில்லை, சேதி இதுதான்! பிரிட்டனின் பிரதமரான போரிஸ் ஜான்சனுக்குக் கரோனா நோய்த் தொற்று. தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் அவர் எல்லாவற்றையும் காணொலி வாயிலாகத்தான் செயல்படுத்த வேண்டிய நிலையிலிருக்கிறார். அண்மையில் கரோனா பாதித்தவர்களுடன் கையைப் பிடித்தெல்லாம் குலுக்கிக் கொண்டிருந்தார் ஜான்சன். அதைப் பார்த்துப் பலரும் விமர்சனம் செய்தனர் …

முடங்கும் நிலையில் மளிகைக் கடைகள்

வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட பெரும் நகரங்களுக்கு கொண்டுவரப்படும் அத்தியாவசியப் பொருள்கள் தடைபட்டுள்ளதால் மளிகைக் கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகள் முடங்கும் நிலையில் உள்ளன. இதனால் அடுத்து வரும் சில நாள்களில் அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் …

ஐந்து நாட்களில் 11 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்…. காவல்துறை அறிவிப்பு

கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதேபோல் தமிழக அரசு அறிவித்திருந்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக 144 தடை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும்நிலையில் 144 தடை …

ஸ்பெயினில் கரோனா பலி 6 ஆயிரத்தை தாண்டியது…!

சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் மொத்தம் 6,66,666க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் கரோனாவிற்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கிடையில் கரோனா தொற்றால் இத்தாலியில் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 23 பேரும் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 6, 528 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் காரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 78,797ஆக உயர்ந்துள்ளது என்பது …