கொரோனா எதிரொலி; 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்படுவர்: டெல்லி துணை முதல் மந்திரி

கொரோனா எதிரொலியாக டெல்லியில் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவ மாணவியர் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நேரடியாக அடுத்த வகுப்புக்கு சென்று விடுவார்கள். புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா அச்சம் சூழ்ந்த நிலையில், டெல்லியில் அனைத்து பள்ளிகளும் கடந்த 23ந்தேதி முதல் மூடும்படி முதல் மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டார். இதனை அடுத்து மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. …

கரோனா 1 லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு; 11 ஆயிரத்தைத் தாண்டிய பலி: திணறும் இத்தாலி

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டி 11,591 ஆக உள்ளது. கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. சீனாவில் தொடங்கி 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளைப் பாதித்துள்ள கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இத்தாலி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கரோனா வைரஸ் நோயத் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை பாதித்தோரின் எண்ணிக்கை 1,01,739 ஆக உள்ளது. …

ஏப்.2 முதல் நிவாரணத் தொகை, ரேஷன் பொருள்கள்: அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்

திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல், அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை மற்றும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என்.நடராஜன். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண உதவித் தொகை வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது: நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முதல்வா் அறிவித்துள்ள ரூ.1000 உதவித் தொகை, அரிசி, பருப்பு, …

‘கொரோனாவை விட கொடியது தொழிலாளர்களின் இடப்பெயர்வு:’ நீதிமன்றம் எச்சரிக்கை

புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்று, ஒட்டுமொத்த உலகையும் அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல், புதிது புதிதாக பல்வேறு பிரச்னைகள் தோன்றி வருகின்றன. இவற்றில் மாபெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது தொழிலாளர்களின் இடப் பெயர்வுதான். ஊரடங்கு உத்தரவால், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். குறிப்பாக, புதுடில்லியில் தங்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்த உத்தரபிரதேசம், …

தேவைகள் குறையும் என்பதால் நாட்டின் வளர்ச்சியும் குறையும்

புதுடில்லி : வரவிருக்கும் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 3.5 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது, எஸ் அண்டு பி குளோபல்ரேட்டிங்ஸ் நிறுவனம். இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அடுத்த நிதியாண்டில், நாட்டின் வளர்ச்சி, 3.5 சதவீதமாக இருக்கும். இதற்கு முன், 5.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், கடன் தகுதியானது சரியும் என, எதிர்பார்க்கப்படுவதுதான். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்தியாவில் தேவைகள் குறைந்து, …

கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?

  கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர். அவற்றின் மேற்பரப்பில் ஒருவேளை கொரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதை தொற்றிக்கொள்ளாமல் இருக்க இவ்வாறு செய்கின்றனர். ஆனால், எந்தெந்த பொருட்கள் மீது இந்த வைரஸ் …

கொரோனா வைரஸ்: இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் நிலைமை என்ன ?

  மார்ச் 26ஆம் தேதிவரை தெற்காசிய பிராந்தியத்தில் 2,081 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 92 சதவீதத்தினர் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர். தெற்காசிய பிராந்தியத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடாக பாகிஸ்தான் உள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து இதே நிலைமை இல்லை. அதாவது, இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி 30ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், …

வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை, கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் தேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்ப முடியாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். கோவா மாநிலத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். …

பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் – முதல்-அமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்

பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார் சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- இன்று, நம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்கும், நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு வருவதற்கும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். டெங்கு காய்ச்சல் படுவேகமாகப் பரவிய …

அத்தியாவசிய சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி வழங்குவது யார்? – அரசு அறிவிப்பு

அத்தியாவசிய சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி வழங்குவது யார் என்று அரசு அறிவித்துள்ளது. சென்னை, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தொழில்துறை முதன்மை செயலாளர், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை முதன்மை செயலாளர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தொழிற்சாலைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட தொழில்களுக்கு அத்தியாவசியமான பணியாளர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான அனுமதி உத்தரவை சென்னை தவிர மற்ற மாவட்ட கலெக்டர்களின் தனி செயலாளர்கள் (பொது) …