பாகிஸ்தானில் புதிதாக 500 பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 56 ஆனது

பாகிஸ்தானில் புதிதாக 500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், புதிதாக 500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது. மேலும் 4 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 429 பேர் குணமடைந்துள்ளனர். வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள …

உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ள டிரம்ப், அந்த அமைப்புக்கு வழங்கும் நிதி உதவியை நிறுத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆரம்ப காலத்தில் கொரோனாவின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வைரஸ் அசுர வேகத்தில் பரவத் …

14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதற்கான ஆணையை அரசு பிறப்பித்து உள்ளது. சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தீவிர பணியாற்றி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது. இந்த உத்தரவு கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே …

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 149 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. சமூக தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் கடினமான வாரங்கள். இதைக் கடந்து விட்டால் …

இலங்கைக்கு 10 டன் அத்தியாவசிய மருந்துகள்- இந்தியா பரிசாக அளித்தது

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில், இலங்கைக்கு 10 டன் எடையுள்ள அத்தியாவசிய மருந்துகளை இந்தியா பரிசாக அளித்தது. கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 180 ஆக உள்ளது. 6 பேர் பலியாகி உள்ளனர். இருப்பினும், இம்மாத இறுதிக்குள் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று இலங்கை சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2 ஆயிரத்து 500 வரை உயரும் என்று தெரிகிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு …

சென்னையில் மொத்தம் 149 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னையில் மொத்தம் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் 690 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவிக. நகர் மண்டலத்தில் 22 பேர், கோடம்பாக்கம் …

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டதை மறைத்த 150 பேர் மீது வழக்குப்பதிவு

மராட்டியத்தில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டதை மறைத்த 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, டெல்லியில் கடந்த மாதம் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதுவரை அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 400 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களில் 15 பேருக்கு மேல் உயிரிழந்து விட்டனர். இதையடுத்து நேற்று மும்பை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வந்து …

கொரோனா வைரஸ் பாதிப்பு:பிரான்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியது

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரான்ஸ் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியுள்ளது. பாரீஸ் சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது, அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் உருவெடுத்த சீனாவின் உகான் நகரம் சுமார் 11 வாரங்களின் பின்னர் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் …

அமெரிக்காவில் கருப்பின மக்களை அதிகம் கொன்றுள்ள ‘கொரோனா’

வாஷிங்டன்: அமெரிக்காவில் பிற சமூகங்களை விட கருப்பின மக்கள் அதிகளவில், வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இறந்தவர்களில் கணிசமானவர்களும் அவர்கள் தான் என அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வாரம் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. செவ்வாயன்று (ஏப்., 7) மட்டும் 1,800-க்கும் அதிகமானவர்களை அந்நாடு இழந்துள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையிலான இறப்பு இதுவாகும். கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில், …

அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 1,858 பேர் பலி

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில், 1,858 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் நகரில் மட்டும் 800 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசுக்கு, அமெரிக்காவில் இதுவரை 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,854 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கொரோனா பாதிக்கப்பட்டு, 1,736 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் நகரில் மட்டும் 800 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குமட்டும், 1,40,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிகளவில் உயிரிழப்பு …