அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா: பழங்குடியின சிறுவனை வைரஸ் தாக்கியது

அமேசான் காடுகளில் வசிக்கும் யனோமாமி இனத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலியா, கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலகையே பயமுறுத்தி வருகிறது. உலகளவில் இந்த கொடிய வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. 16 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். சுமார் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமேசான் காடுகளுக்கும் நுழைந்துவிட்டது. யனோமாமி என அழைக்கப்படும் பழங்குடியினத்தவர்கள் …

சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு

சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சிங்கப்பூர், சிங்கப்பூரில் சுமார் 250 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவீத் அஷ்ரப் தெரிவித்தார். இவர்களில் 50 சதவீதம் பேர், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் நெருக்கமாக தங்கி இருப்பவர்கள் ஆவர். இந்த இந்தியர்களில் நிரந்தரமாக சிங்கப்பூரில் குடியிருப்பவர்களும் உள்ளனர். அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக தூதர் கூறினார்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து போதிய அளவு கையிருப்பில் உள்ளது – மத்திய அரசு தகவல்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து போதிய அளவு கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மருந்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நல்ல பலன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் இந்த மருந்துக்கான தேவை அதிகரித்து உள்ளது. உலகிலேயே ஹைட்ராக்சிகுளோரோகுயின் …

ஒடிசாவில் அதிரடி முக கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது

ஒடிசாவில் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் முக கவசம் அணிந்து வருபவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 14-ந்தேதியுடன் முடிவுக்கு வர இருக்கும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்தார். மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது கட்டாயம் முக …

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது பற்றி ஜப்பான் பிரதமருடன் தொலைபேசியில் மோடி பேச்சு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது பற்றி ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். புதுடெல்லி, பிரதமர் மோடி, நேற்று ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் தொலைபேசியில் பேசினார். உலகளாவிய கொரோனா வைரஸ் பரவல் நிலை, அதனால் எழுந்துள்ள பொருளாதார சவால்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து பரஸ்பரம் இருவரும் தத்தமது நாடுகளில் எடுத்து வருகிற நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர். கொரோனா …

கொரோனாவை கட்டுப்படுத்த 5 தமிழக மாவட்டங்கள் உள்பட 36 மாவட்டங்கள் மீது தீவிர கவனம் தேவை – மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சியில் பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், தமிழகத்தின் 5 மாவட்டங்கள் உள்பட 36 மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் வேகமாக பரவி வருகிற கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர்., தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரையில் இந்தியாவில் …

தென்கொரியாவை பின்பற்றி ஆமதாபாத்தில் கொரோனா கண்டறியும் பணி தீவிரம்

தென்கொரியா நாட்டை பின்பற்றி ஆமதாபாத் நகரில் கொரோனா பரவலை தடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆமதாபாத், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளும் அதன் சக்திக்கும், சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தென்கொரியாவில் “தீவிர கண்காணிப்பு; தேடிச்சென்று சோதனை” என்ற திட்டத்தின் அடிப்படையில் கொரோனா பரவலை தடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி குறிப்பிட்ட நகரையோ அல்லது ஊரையோ சல்லடை போட்டு கண்காணித்து யாருக்கு எல்லாம் பிரச்சினை இருக்கிறதோ அவர்களை கண்டறிகிறார்கள். …

ஆப்கானிஸ்தான்: தலிபான் தாக்குதலில் வங்கி ஊழியர்கள் 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய வங்கி ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்தனர். காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் சில பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் 2001-ம் ஆண்டு முதல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த பயங்கரவாதிகள் பொதுமக்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப்படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இ தனால், அரசுப்படைகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது …

கொரோனாவுக்கு உயிரிழப்பை சந்திக்காத நாடுகள் எவை தெரியுமா?

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசில் இருந்து சில நாடுகள் தப்பித்துள்ளன. அந்த நாடுகளில் வைரசுக்கு இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. ஜெனிவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 16 லட்சத்து 80 ஆயிரத்து 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 5 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 49 …

நினைத்ததைவிட நீண்ட நேரம் காற்றில் இருக்கும் கொரோனா வைரஸ்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா வைரசை சுமந்து செல்லும் துகள்கள் இதற்கு முன்பு நினைத்ததை விட நீண்ட நேரம் காற்றில் இருக்கக்கூடும் என்று பின்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஹெல்சிங்கி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மருத்துவத் துறைக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. இன்றைய நிலவரப்படி 16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 96 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதைக்கு வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கவும், வைரஸ் …

You cannot copy content of this page