மார்ச் 26ஆம் தேதிவரை தெற்காசிய பிராந்தியத்தில் 2,081 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 92 சதவீதத்தினர் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர். தெற்காசிய பிராந்தியத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடாக பாகிஸ்தான் உள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து இதே நிலைமை இல்லை. அதாவது, இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி 30ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், …
பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் – முதல்-அமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்
பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார் சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- இன்று, நம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்கும், நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு வருவதற்கும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். டெங்கு காய்ச்சல் படுவேகமாகப் பரவிய …
மூன்றாம் உலகப் போர் “கரோனா’!
” கரோனா என்னும் மூன்றாம் உலகப்போரை எதிர்த்து நடக்கும் இந்த யுத்தத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் காப்பீடு வரவேற்கத்தக்கது. பணியின்போது அவர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். ” கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பது எப்படி? இந்நோய்க்கு எப்படி வைத்தியம் செய்வது? இதனால் எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படப் போகின்றன என்பதையெல்லாம் அறிய முடியாமல் மிகப் பெரிய கலக்கத்திலும், பேரச்சத்திலும் மக்கள் ஆழ்ந்திருக்கிற நேரமிது. ஏற்கெனவே, கரோனா நோய்த்தொற்று 190-க்கும் …