கொரோனா வைரசானது நுரையீரலை மட்டுமல்லாது சிறுநீரகத்தையும் பாதிக்கும் என வெளியாகியுள்ள புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி, உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோய், நோயாளிகளின் நுரையீரலை பாதித்து விடுகிறது. இதனால் சுவாசிக்க முடியாத நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டு, நிலைமை மோசமாகிறது. இதுபற்றிய விழிப்புணர்வு இப்போது ஓரளவுக்கு எல்லோருக்கும் வந்து விட்டது. இந்த நிலையில், இந்த வைரஸ், நுரையீரலை மட்டுமல்லாது சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சர்வதேச சிறுநீரக சொசைட்டியும் இது …
நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைப்பு: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல்
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கரோனா பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அனைத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக பொதுத்தேர்வு தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என பல்வேறு மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. …
இஷ்டம் போல மருந்து சிபாரிசு: ஆயுஷ் அமைச்சகம் திடீர் தடை
சென்னை :கொரோனா வைரஸ் ஒழிப்பு சிகிச்சைக்கு, பாரம்பரிய மருத்துவ முறைகளை பரிந்துரைத்து பிரசாரம் செய்ய, ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது.உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. இந்தியாவில், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையும், மற்றவர்களுக்கு தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, மருத்துவர்கள் அல்லாத பலர், பல்வேறு சிகிச்சை முறைகளை, சமூக வலைதளங்கள் வழியாக பரப்பி வருகின்றனர். இதில் பல, …
மூக்கு வழியாகசெலுத்தும் கொரோனா தடுப்பூசியை தயாரித்து பரிசோதனைகளை நடத்துகிறது பாரத் பயோடெக்
பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசி தயாரித்து மருத்துவ பரிசோதனைகளை நடத்துகிறது. உலகளாவிய விநியோகத்திற்காக கிட்டத்தட்ட 30 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க உள்ளது. புதுடெல்லி தடுப்பூசி தயாரிப்பாளர் பாரத் பயோடெக் அமெரிக்காவைச் சேர்ந்த தடுப்பூசி நிறுவனமான ஃப்ளூஜென் மற்றும் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்டுகளுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக ஒரு தனித்துவமான இன்ட்ரானசல் தடுப்பூசியை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. பாரத் பயோடெக் தடுப்பூசி தயாரிக்கும், மருத்துவ பரிசோதனைகளை நடத்துகிறது. உலகளாவிய விநியோகத்திற்காக கிட்டத்தட்ட 30 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க உள்ளது. …
தென் மாவட்டங்களில் ஒரே நாளில் 59 பேருக்கு ‘கொரோனா’
மதுரை: டில்லி தப்லிக் மாநாட்டிற்கு பங்கேற்று திரும்பிய தென் மாவட்டங்களை சேர்ந்த 59 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மதுரை — 9: இம் மாநாட்டில் பங்கேற்ற மேலுாரை சேர்ந்த 6 பேர், பேரையூரை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் மேலும் எட்டு பேர் கொரோனாவால் பாதிப்பிருக்கலாம் என்பதால் அவர்களின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா உறுதியான ஒன்பது பேர் உட்பட 17 பேர் கொரோனா …
தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் – விஞ்ஞானிகள்
தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் என்று எச்சரித்ததாக மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனில் (ஜமா) வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரையில் எம்ஐடியின் இணை பேராசிரியரும் திரவ இயக்கவியலில் நிபுணருமான லிடியா பவுரவுபியாவால் கூறி உள்ளார். …
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது.தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார். லாஸ்ஏஞ்சல்ஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் உகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 721,412 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 151,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான …
கொரோனா சிகிச்சைக்கு 3 மருந்துகள் தயார் – ரஷியா தகவல்
கொரோனா வைரசை குணப்படுத்த வாய்ப்புள்ள 3 மருந்துகள் தயாராக இருப்பதாக ரஷிய விஞ்ஞான அகாடமியின் துணைத்தலைவரும், உயிரி மருத்துவ அறிவியல் பிரிவின் தலைவருமான விளாடிமிர் செகோனின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:- மாஸ்கோ, ரஷிய விஞ்ஞான அகாடமியின் கிளையில் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதை கொரோனாவை குணப்படுத்த பயன்படுத்தலாமா என்று சீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். தற்போது, வைரஸ் சுவாச தொற்றை குணப்படுத்துவதற்கான ஒரு விசேஷ இன்ஹேலர் தயாராக …
கரோனா 1 லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு; 11 ஆயிரத்தைத் தாண்டிய பலி: திணறும் இத்தாலி
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டி 11,591 ஆக உள்ளது. கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. சீனாவில் தொடங்கி 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளைப் பாதித்துள்ள கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இத்தாலி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கரோனா வைரஸ் நோயத் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை பாதித்தோரின் எண்ணிக்கை 1,01,739 ஆக உள்ளது. …
கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர். அவற்றின் மேற்பரப்பில் ஒருவேளை கொரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதை தொற்றிக்கொள்ளாமல் இருக்க இவ்வாறு செய்கின்றனர். ஆனால், எந்தெந்த பொருட்கள் மீது இந்த வைரஸ் …