கல்லூரி, பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடக்கும்? என்பது குறித்து 13-ந் தேதிக்கு பிறகு தெரியவரும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்து இருக்கிறது. சென்னை, நாடு முழுவதும் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கல்லூரிகள் அனைத்தும் வருகிற 14-ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கின்றன. இந்த காலகட்டங்களில் மாணவர்களின் கற்றல், கற்பித்தலில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்கலைக்கழக மானியக்குழு ஆன்-லைனில் பாடம் நடத்துவது குறித்த ஆலோசனையை வழங்கியது. அதன்படி, சென்னை பல்கலைக்கழகம் அதன் கீழ் …
போக்குவரத்து வசதி குறைந்ததால் மளிகை பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்வு
போக்குவரத்து வசதி குறைந்ததால் மளிகை பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது. அதிலும் அரிசி, சர்க்கரை, பூண்டு ஆகியவற்றின் விலை மட்டும் அதிகளவில் உயர்ந்துள்ளது. சென்னை, கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களில் வரும் மளிகை பொருட்களின் …
அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி “மோடி செய்த உதவியை மறக்க மாட்டோம்” – டிரம்ப் நெகிழ்ச்சி
அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதை அனுமதித்த பிரதமர் மோடியின் உதவியை மறக்க மாட்டோம் என்று டிரம்ப் நெகிழ்ச்சியுடன் கூறினார். வாஷிங்டன், இந்தியா, மலேரியா காய்ச்சல் சிகிச்சையில் பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் ஆகும். இந்த மாத்திரைகள், தற்போது உலகமெங்கும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சையிலும் நல்லதொரு நிவாரணத்தை தருவது சோதனைகளில் தெரிய வந்துள்ளது. இந்த மாத்திரைகளின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்து இருந்தது. ஆனால் டிரம்ப் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த …
இந்தியாவில் ஒரே நாளில் 591 பேருக்கு பரவியது; கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டுகிறது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டிவருகிறது. ஒரே நாளில் 591 பேருக்கு பரவியது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவது இன்னும் இரண்டாவது கட்டத்தில்தான் இருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா வைரஸ் வேகமாகவே பரவுகிறது. மூன்றாவது கட்டமான சமூக பரவலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிற நிலையிலும், நேற்றுடன் முடிந்த 24 மணி நேரத்தில், 591 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. நேற்றைய நிலவரப்படி, மாநில …
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளது. வெப்பம் பரவி வருகிறது. ஊரடங்கால் மக்கள் வேறெங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக …
ஊரடங்கு நீட்டிப்பு; கொரோனா பாதிப்பின் நிலைமைக்கு ஏற்ப முடிவு: முதல் அமைச்சர் பேட்டி
ஊரடங்கு நீட்டிப்பு பற்றி கொரோனா பாதிப்பின் நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டியில் கூறியுள்ளார். சென்னை, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளில் பணியாற்றி வரும் 12 குழுக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அவர் பேசும்பொழுது, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. 2,500 வென்டிலேட்டர்கள் வாங்கவும் மற்றும் 4 லட்சம் …
மே மாதம் நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் தள்ளிவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், மே மாதம் நடைபெறுவதாக இருந்த பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காலம் முடிந்த பிறகு, புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்; முதல் அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என முதல் அமைச்சர் பேட்டியில் கூறியுள்ளார். சென்னை, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, தமிழகத்தில் 96.30 சதவீதம் பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 3 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். 73 ஆயிரம் பேருக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது. நலவாரிய தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகத்தில் 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும். சென்னையில் பணியின்பொழுது …
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மணலி, அம்பத்தூர் தவிர்த்து, 13 மண்டலங்களில் மொத்தம் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுதவிர வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆனால் தற்போது சென்னையில் உள்ள 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை! திருவெற்றியூர்-4 மணலி-0 மாதவரம்-3 தண்ட்டையார்பேட்டை-13 …
ஒடிசா மாநிலத்தில் வரும் 30 – ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஒடிசா மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புவனேஷ்வர், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மாநில முதல்-மந்திரிகளுடன் அவ்வப்போது காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 16 நாட்கள் …