ஐரோப்பாவில் கொரோனா பலி 75 ஆயிரத்தை கடந்தது

ஐரோப்பாவில் கொரோனா பலி 75 ஆயிரத்தை கடந்துள்ளது. பாரீஸ், கொரோனா வைரசுக்கு ஐரோப்பாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 80 சதவீதத்தினர் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 4 நாடுகளில் இறந்துள்ளனர். ஸ்பெயினில் 16 ஆயிரத்து 972 பேரும், பிரான்சில் 13 ஆயிரத்து 832 நபர்களும், இங்கிலாந்து நாட்டில் 9,875 பேரும், இத்தாலியில் 19 ஆயிரத்து 468 பேரும் நேற்று காலை வரை கொரோனா வைரஸ் தொற்றுநோயில் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி …

அமெரிக்க போர்க்கப்பலில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 550 ஆக உயர்வு

அமெரிக்க போர்க்கப்பலில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 550 ஆக உயர்ந்துள்ளது. நியூயார்க், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல், பிலிப்பைன்ஸ் அருகே உள்ள குவாம் தீவில் உள்ள ஆப்ரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அணுசக்தி மூலம் இயங்கும் இந்தக் கப்பலில் 114 மாலுமிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தங்களை அரசு கண்டு கொள்ளவில்லை என கப்பலின் தலைமை அதிகாரி பிரட் குரோஷியர் அமெரிக்க ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பினார். …

கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய பொருளாதாரம் கடும் சீர்குலைவு – உலக வங்கி அறிக்கை

கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய பொருளாதாரம் கடுமையாக சீர்குலைந்துள்ளது என்பது உலக வங்கி அறிக்கையில் அம்பலமாகி உள்ளது. வாஷிங்டன், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இந்திய தொழில் துறை முற்றிலுமாய் முடங்கி உள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரசால் தெற்காசியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் குறித்து உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியா பொருளாதாரம் கடுமையாக சீர்குலைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. …

கொரோனா வைரசின் ருத்ர தாண்டவத்தில் உலகிலேயே அமெரிக்காவுக்கு முதல் இடம் – அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள், உயிர்ப்பலிகள்

கொரோனா வைரசின் ருத்ர தாண்டவத்தில், உலகிலேயே அமெரிக்கா முதல் இடம் வகிக்கிறது. அங்குதான் அதிக எண்ணிக்கையிலானவர்களை இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது. கூடுதல் உயிர்ப்பலியும் அங்குதான் நேரிட்டிருக்கிறது. நியூயார்க், அமெரிக்க வல்லரசு, தற்போது கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய வைரசின் ருத்ரதாண்டவத்தினால் அதிர்ந்து போய் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கூடுதலான நபர்களை இந்த வைரஸ் அங்கு ஆட்கொண்டு வருகிறது. அதிக எண்ணிக்கையில் உயிர்ப்பலிகளையும் ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தை பேரழிவு மாகாணமாக ஜனாதிபதி டிரம்ப், …

கொரோனா பற்றிய அச்சத்திற்கு அடிபணியாமல் நம்பிக்கையை பரப்பும் தூதர்களாக இருங்கள் – போப் ஆண்டவர் அழைப்பு

கொரோனா பற்றிய அச்சத்திற்கு அடிபணியாமல், நம்பிக்கையை பரப்பும் தூதர்களாக இருக்க வேண்டுமென மக்களுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். வாடிகன் நகர், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று உலகம் முழுவதும் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டது. எனினும் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் ஈஸ்டர் தின கொண்டாட்டங்கள் களையிழந்தன. இந்த நிலையில் கத்தோலிக்க …

உலகம் முழுவதும் 22 ஆயிரம் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் சுமார் 22 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜெனீவா, சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரசான கொரோனா, உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி, டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை …

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் கொரோனா பரவும் அபாயம் – உலக வங்கி எச்சரிக்கை

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் கொரோனா பரவலாம் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. வாஷிங்டன், தெற்காசிய பொருளாதார கொரோனாவின் தாக்கம் எனும் பெயரில் ஆய்வறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- உலகின் மிக அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதிகளில் தெற்காசியாவும் ஒன்று. நகர்ப்புறங்கள், மற்றும் உள்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது இப்பகுதியில் மிகப்பெரிய சவாலாகும். இங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே எளிதாக …

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வீடு திரும்பினார் – டாக்டர்களுக்கு வாழ்வெல்லாம் கடன்பட்டிருப்பதாக நெகிழ்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கி, லண்டன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வீடு திரும்பினார். லண்டன், 55 வயதான இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி, லண்டன் டவுனிங் வீதியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில், நோயின் தாக்கம் தீவிரமானது. இதையடுத்து கடந்த 5-ந் தேதி லண்டன் செயிண்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால், மறுநாள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு …

கொரோனா பாதிப்பு விகிதம் இந்தியாவில் குறைவு – உலக சுகாதார அமைப்பு தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவா, உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனா பாதிப்பு விகிதம் இந்தியாவில் குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி உலக சுகாதார அமைப்பின் சார்பில் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரசுக்கான சோதனைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரையில் ஒவ்வொரு 100 சோதனைகளுடன் ஒப்பிடுகையில் மற்ற நாடுகளை காட்டிலும் குறைவான அளவில் பாசிட்டிவ் …

கொரோனா எதிரொலி; இங்கிலாந்துக்கு 30 லட்சம் காய்ச்சல் மாத்திரைகள் ஏற்றுமதி

கொரோனா எதிரொலியாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு 30 லட்சம் காய்ச்சல் மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. லண்டன், கொரோனா வைரசால் இங்கிலாந்து கடுமையாக பாதித்து உள்ளது. அங்கு 74 ஆயிரத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டுக்கு கொரோனா பாதித்தவர்களின் காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கிற வகையில் இந்தியா 30 லட்சம் பாரசிட்டமால் மாத்திரைகளை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் இத்தகைய மருந்து பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், இது முக்கியமான …