கொரோனா சிகிச்சை விரைவு பரிசோதனை கருவிகள் உள்பட இந்தியாவுக்கு 6 லட்சம் மருத்துவ உபகரணங்கள் – சீனா அனுப்பி வைத்தது

இந்தியாவுக்கு விரைவு பரிசோதனை கருவிகள் உள்பட 6½ லட்சம் மருத்துவ உபகரணங்களை விமானம் மூலம் சீனா அனுப்பி வைத்தது. பீஜிங், சீனாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, 2 மாதங்களாக மூடிக்கிடந்த தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன. பல்வேறு நாடுகள், கொரோனாவின் பிடியில் இருந்து மீளாததால், அதை பயன்படுத்தி, கொரோனா சிகிச்சை, பரிசோதனை தொடர்பான மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உடைகள் உற்பத்தியை தீவிரப்படுத்தி உள்ளன. அந்த வகையில், இந்தியா கேட்டுக்கொண்டதால், 6 லட்சத்து 50 ஆயிரம் …

கொரோனா பதித்தவர்களை மது பாதுகாக்காது – உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்

கொரோனா பதித்தவர்களை மது பாதுகாக்கும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வந்த வேளையில், அதை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எந்த வகை மதுவும், உடல்நலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தக் கூடியதுதான். உலகளவில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் மதுபானங்களால் ஏற்படுகிற பாதிப்பால் மரணம் அடைகின்றனர். தவிரவும் பல்வேறு பாதிப்புகளை மதுபானங்கள் ஏற்படுத்துகின்றன. குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து விடுகிறார்கள். பல்வேறு குற்றங்களை தயக்கமே இன்றி செய்து சட்டத்தின் பிடியில் சிக்குவதையும் பார்க்க …

டிஜிட்டல் க்யூஆர் குறியீடு மூலம் கொரோனாவை தடுக்கும் சீனா!

பீஜிங்: பொது மக்களின் ஸ்மார்ட் போன்களில் சிகப்பு, மஞ்சள், பச்சை என க்யூஆர் ஆரோக்கிய குறியீடுகளை ஒதுக்கி, அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தி வருகிறது சீனா. இதனை ஜப்பான், ரஷ்யா நாடுகளும் பின்பற்ற தொடங்கியுள்ளன. கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரம் உள்ளிட்ட பல நகரங்களில், மூன்று மாத ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. பச்சை நிற க்யூஆர் ஆரோக்கிய …

ஸூம் செயலி பாதுகாப்பானது இல்லை: மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

ஸூம் செயலி பாதுகாப்பானது இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஐடி துறை உள்பட தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி அளித்துள்ளது. இந்த சூழலில், ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்தபடி தங்கள் மேலதிகாரிகளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடர்பு கொண்டு கலந்துரையாடுகின்றனர். இதனால், ஸூம் என்ற …

சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரிப்பு

சீனாவின் உகான் நகரம் கொரோனா பிடியில் இருந்து மெதுவாக மீண்ட நிலையில், வடகிழக்குப் பகுதிகளில் கொரோனா தாக்கம் மீண்டும் ஏற்படத் தொடங்கியுள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,சமீபத்தில் கொரோனோ பாதிப்புக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1,500 என அதிகரித்துள்ளது. ஆனால் ரஷ்யாவிலிருந்து சீனர்கள் வெளியேற்றப்பட்டு வருகிற நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகக் …

கொரோனாவுக்கு தடுப்பு ஊசி கண்டு பிடித்தால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும் – ஐ.நா. பொதுச்செயலாளர்

கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பது மட்டுமே உலகை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு தடுப்பு ஊசி கண்டு பிடித்தால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும் – ஐ.நா. பொதுச்செயலாளர் சொல்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் ஜெனிவா: கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு ஆண்டு ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஐ.நா. பொதுச் …

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி

கொரோனா வைரஸ் கோர தாண்டவத்துக்கு நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 960 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரமாக உயர்ந்தது. கொரோனா வைரஸ் கோர தாண்டவத்துக்கு நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 960 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரமாக உயர்ந்தது. நியூயார்க்: கொரோனா பரவ தொடங்கிய கடந்த 3 மாதங்களில் நேற்றுதான் அதிகமானோர் உயிரிழந்து இருக்கிறார்கள். …

கைகளை கழுவ சானிடைசருக்கு பதில் ‘வோட்கா’வை பயன்படுத்த ஜப்பான் முடிவு

கைகளை கழுவ கிருமி நாசினிக்கு பதிலாக ஆல்கஹாலையே நேரடியாக பயன்படுத்த ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. டோக்கியோ: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ‘சானிடைசர்’ எனப்படும் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஜப்பானிலும் தற்போது கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஒவ்வொரு கிருமி நாசினியிலும் 70 முதல் …

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 50 ஆயிரம் பேர் பலியாவார்கள்- டாக்டர் எச்சரிக்கை

நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 50 ஆயிரம் பேர் பலியாவார்கள் என டாக்டர் ஒருவர் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். அங்கு பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கணித்துள்ளனர். இந்நிலையில், நியூயார்க் ஆஸ்பத்திரி ஒன்றில் பணியாற்றும் டாக்டர் மர்லின் கேப்லன் என்பவர், நியூயார்க் மாகாணத்தில் 50 ஆயிரம்பேர் பலியாவார்கள் என்று கணித்துள்ளார். …

இந்தியா அனுப்பி வைத்த 28 லட்சம் மாத்திரை பாக்கெட்டுகள் இங்கிலாந்து சென்றன

இந்தியா அனுப்பி வைத்த 28 லட்சம் பாராசிட்டமால் மாத்திரை பாக்கெட்டுகள் இங்கிலாந்து சென்றடைந்தன. இந்தியாவுக்கு இங்கிலாந்து அரசு புகழாரம் சூட்டியது. லண்டன்: கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, சில அத்தியாவசிய மருந்து பொருட்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்து இருந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளை ஏற்று இந்த தடையை நீக்கியது. இதற்கிடையே, இங்கிலாந்து கோரிக்கையை ஏற்று, காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், 28 லட்சம் பாராசிட்டமால் மாத்திரை பாக்கெட்டுகளை கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. இந்த …