கரோனா காலம்: பிரிட்டிஷாரை ஆளும் இந்தியர்கள்!

இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களை ஆண்ட பிரிட்டிஷாரை இப்போது ஆண்டுகொண்டிருப்பவர்கள், நம்ப மாட்டீர்கள், இந்தியர்கள்தான்! கரோனாவால்தான் காலம் இப்படியும் மாறியிருக்கிறது. என்ன இது அபத்தமாக இருக்கிறது என்று பதற்றமடைந்துவிட வேண்டியதில்லை, சேதி இதுதான்! பிரிட்டனின் பிரதமரான போரிஸ் ஜான்சனுக்குக் கரோனா நோய்த் தொற்று. தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் அவர் எல்லாவற்றையும் காணொலி வாயிலாகத்தான் செயல்படுத்த வேண்டிய நிலையிலிருக்கிறார். அண்மையில் கரோனா பாதித்தவர்களுடன் கையைப் பிடித்தெல்லாம் குலுக்கிக் கொண்டிருந்தார் ஜான்சன். அதைப் பார்த்துப் பலரும் விமர்சனம் செய்தனர் …

ஸ்பெயினில் கரோனா பலி 6 ஆயிரத்தை தாண்டியது…!

சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் மொத்தம் 6,66,666க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் கரோனாவிற்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கிடையில் கரோனா தொற்றால் இத்தாலியில் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 23 பேரும் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 6, 528 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் காரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 78,797ஆக உயர்ந்துள்ளது என்பது …

You cannot copy content of this page