அமெரிக்காவில் 4 வயது புலிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யபட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணம் வூஹானில் பரவத்தொடங்கிய கரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு உலகம் முழுவதும் 216க்கும் மேற்பட்ட நாடுகளில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சுமார் 336,673 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மனித சமூகத்தை …
ரஷியாவில் பயங்கரம்: சத்தமாக பேசியதால் 5 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர்
ரஷியாவில் வாலிபர் ஒருவர், சத்தமாக பேசியதால் 5 பேரை சுட்டுக்கொன்றார். மாஸ்கோ, ரஷியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள ரியாசான் பிராந்தியம் முடக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த …
கொரோனா வைரசுக்கு நியூயார்க் மாகாணத்தில் 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் சாவு
நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 2½ நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர். வாஷிங்டன், அமெரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நியூயார்க் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியது. நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கி வருகிறது. நியூஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மசாசுசெட்ஸ், பென்சில்வேனியா ஆகிய …
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 65 ஆயிரத்து 605 ஆக உயர்ந்து உள்ளது. புதுடெல்லி, சீனாவில் இருந்து 199க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 65 ஆயிரத்து 605 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 14 ஆயிரத்து 487 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்து 626 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். 8 …
தேவைப்பட்டால், ஹைட்ராக்ஸி குளோரோகுயினை நானும் உட்கொள்வேன்-டொனால்டு டிரம்ப்
தேவைப்பட்டால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை நானும் உட்கொள்வேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் 8,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு சிகிச்சையும் இல்லாத கொடிய கொரோனா வைரஸ் நோயால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. இதுவரை உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள், 64,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் 12 லட்சம் …
சீனாவிடம் வாங்கிய கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் தரமற்றவை – ஐரோப்பிய நாடுகள் ‘பகீர்’ குற்றச்சாட்டு
சீனாவிடம் வாங்கிய கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் தரமற்றவை என்று ஐரோப்பிய நாடுகள் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளன. மாட்ரிட், தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக சீனாவும், அந்நாட்டின் பிரபல மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களும் மேற்கத்திய நாடுகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரசை விரைவாக கண்டறியும் கருவிகள் மற்றும் தரமான முகக் கவசங்கள் தங்களிடம் விற்பனைக்கு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, கொரோனா வைரசை கண்டறியும் பரிசோதனை கருவி …
உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஜெனீவா, சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக …
திட்டமிட்டபடி நவம்பரில் தேர்தல்: டிரம்ப்
வாஷிங்டன்: “கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்தாலும், திட்டமிட்டபடி, நவம்பர், 3ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறும்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்காவில், வரும் நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், நாட்டின் அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப், மீண்டும் களமிறங்க இருக்கிறார். ஜனநாயக கட்சி சார்பில், வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல், பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2.75 …
கொரோனா:சீனாவில் 95 போலீசார், 45 மருத்துவ ஊழியர்கள் பலி
பீஜிங்: சீனாவில் கொரோனா வைரசுக்கு 95 போலீசார் 45 மருத்துவ ஊழியர்கள் பலியாகி உள்ளதாக சீன நாட்டின் அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இதனையடுத்து வைரஸ் சிகிச்சையை குணப்படுத்த தீவிரம் காட்டி வந்தது.சீன அரசு. இதற்காக 42 ஆயிரம் மருத்துவ ஊழியர்களை களம் இறக்கப்பட்டனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 14 தற்காலிக மருத்துவமனைகளை கட்டியது. வூஹான் மாகாணத்தில் 812639 பேர் …
அமெரிக்காவுக்கு மீண்டும் சோதனை மிரட்டும் இரு புயல்கள்
கலிபோர்னியா: கொரோனா வைரஸ் அமெரிக்காவை நிலைகுலைய வைத்துள்ள நிலையில், அடுத்து வரக்கூடிய இரு புயல்கள் கலிபோர்னியா மாகாணத்தை புரட்டிபோட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முதல் புயல் சனிக்கிழமை(ஏப்.4) கரைக்கு வந்து மாநிலத்தின் வடக்குபகுதியில் மூன்றில் இரண்டு பகுதிக்கு கடுமையான மழை பெய்யும், பின்னர் சியரா மற்றும் வடக்குகலிபோர்னியா மலைகளுக்கு இடைப்பகுதியில் பனி மழையை கொண்டுவரும். பின்னர் கிழக்கு நோக்கி நகர்ந்து பனி மழையை தரும்.. இரண்டாவது புயல் மேலும் சக்திவாய்ந்ததாகத் தோன்றி ஞாயிற்றுக்கிழமை(ஏப்.5) கரைக்கு வருகிறது, அப்போது …