வங்கிகளுக்கு வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான மாத தவணைகள் செலுத்தாவிட்டால் கூடுதல் வட்டி கட்ட வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. வங்கிகளுக்கு 3 மாத தவணை செலுத்தாவிட்டால் கூடுதல் வட்டி கட்ட வாய்ப்பு கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் நோக்கத்தில் ரிசர்வ் வங்கி பல்வேறு சலுகைகளை அறிவித்தது. வீட்டுக்கடன், வாகனக் …
கொரோனா பாதிப்பு- மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா பாதிப்பு- மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை பிரதமர் மோடி புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. சில மாநிலங்களில் கொரோனா பரவல் சற்று அதிகமாக காணப்படுகிறது. எனவே இதுகுறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த ஏற்பாடுகளை செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதன்படி, இந்த மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி …
இந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு – மத்திய அரசு தீவிர கவனம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருக மையப்புள்ளிகளாக திகழ்ந்த 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. புதுடெல்லி, இந்தியாவில், கடந்த ஒரு வார காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்தது. இதற்கு மையப்புள்ளிகளாக திகழ்ந்த 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. அந்த இடங்கள் மீது தனிகவனம் செலுத்தி வருகிறது. டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களும், குஜராத், ராஜஸ்தான் …
அறிகுறி இன்றி ‘கொரோனா’ பாதிப்பு; சீனாவின் அறிவிப்பால் பீதி
பீஜிங்: சீனாவில் அறிகுறிகள் இல்லாமல் புதிதாக 1541 பேருக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நாட்டு மக்களை பீதியடைய செய்துள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில் 81 ஆயிரத்து 554 பேர் பாதிக்கப்பட்டனர்; அதில் 3312 பேர் உயிரிழந்தனர். 76 ஆயிரத்து 238 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். இப்படி மோசமான பாதிப்புகளை சந்தித்த சீனா பல …
டில்லி மாநாடு:போலீசாரிடம் சிக்கிய 275 வெளிநாட்டினர்
டில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிகி ஜமாத் என்ற முஸ்லிம் மத அமைப்பு சார்பில் முஸ்லிம் மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் பங்கேற்றனர். இதற்கிடையே, கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தெலுங்கானா திரும்பிய 6 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பலியானார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஒருவரும் பலியானார். இதனால், நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் …
தென் மாவட்டங்களில் ஒரே நாளில் 59 பேருக்கு ‘கொரோனா’
மதுரை: டில்லி தப்லிக் மாநாட்டிற்கு பங்கேற்று திரும்பிய தென் மாவட்டங்களை சேர்ந்த 59 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மதுரை — 9: இம் மாநாட்டில் பங்கேற்ற மேலுாரை சேர்ந்த 6 பேர், பேரையூரை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் மேலும் எட்டு பேர் கொரோனாவால் பாதிப்பிருக்கலாம் என்பதால் அவர்களின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா உறுதியான ஒன்பது பேர் உட்பட 17 பேர் கொரோனா …
கொரோனா வைரஸ் பாதிப்பு:கிழக்கு ஆசியாவில் 1.10 கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் -உலக வங்கி
கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார வீழ்ச்சி காரணமாக, கிழக்கு ஆசியாவில் 1.10 கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. லண்டன் சீனாவின் உகான் நகரில் தொடங்கிய வைரஸ் இன்று உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கூட பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் கிழக்கு ஆசியாவில் 1.10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி …
டெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் இருந்து 36 மணி நேரத்தில் 2,300 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
டெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் இருந்து 36 மணி நேரத்தில் 2,300 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர், 617 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுடெல்லி கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் மலேசியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சுமார் 1,700 பேர் கலந்து கொண்டனர். இதில் பங்குகொண்டவர்களில் கணிசமான பேர் பின்னர் …
நன்கொடை அளிப்போருக்கு 100% வரிவிலக்கு அளிக்க அவசர சட்டம்!
பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100% வரிவிலக்கு அளிக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 386 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது; இதுவரை 38 பேர் …
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உறவின் முறை சங்கங்கள் உதவ வேண்டும் S.A .சுபாஷ் பண்ணையார் வேண்டுகோள்.
நாடார் சங்கங்கள் நமது சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகயும், சமுதாயத்தை மேம்படுத்தி மக்களின் நலன்களை பாதுகாப்பதற்கு உருவாக்கிய நமது முன்னோர்கள் சமுதாய மக்களுக்காக பல வழிகாட்டுதலை வகுத்து தந்திருக்கிறார்கள் அதன் அடிப்படையில் இன்று சங்கம் பல பிரச்சனைகளில் மக்களுக்கு பல வழிகளில் உதவி வருகிறது. இன்று கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பல பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர். பனை தொழிலாளர்கள் மற்றும் தின கூலித்தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட நமது மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக அனைத்து பகுதிகளில் உள்ள நமது நாடார் உறவின்முறை சங்கங்கள் …