முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொலைபேசி எண்கள்

கரோனா கால ஊரடங்குச் சூழலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக கட்டணம் இல்லா உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவைகளுக்கு 18004250111 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், கேட்கும் மற்றும் பேசும் திறன் அற்றவர்களுக்கு காணொலி மூலம் சைகை மொழியில் தங்களது தேவைகளைத் தெரிவிக்க 9700799993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்விரு எண்களும் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் செயல்படும். …

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீனா, தென்கொரியா, ஜெர்மனி உதவியை நாடும் இந்தியா

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப நடைமுறைகளில் சீனா, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் உதவியை இந்தியா நாடி உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீனா, தென்கொரியா, ஜெர்மனி உதவியை நாடும் இந்தியா கோப்புபடம் புதுடெல்லி: இந்தியாவில் 21 நாள் ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். ஆனாலும்கூட கொரோனா வைரஸ் பரவுவது தொடர்கதையாக நீளுகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயாக பரவுகிற நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை …

நள்ளிரவு முதல் அமலாகும் சட்டம் – வைரலாகும் வீடியோ

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய அந்த சட்டம் தடை விதிப்பதாக தகவல் வைரலாகி வருகிறது. நள்ளிரவு முதல் அமலாகும் சட்டம் – வைரலாகும் வீடியோ ஃபேஸ்புக் போலீஸ் அதிகாரி ஒருவர் பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவுடன் இணைக்கப்பட்டு இருக்கும் குறுந்தகவலில், நள்ளிரவு முதல் பேரழிவு மேலாண்மை சட்டம் நாடு முழுக்க அமலாக்கப்படுகிறது. இது அரசு துறைகளுக்கு அப்பாற்பட்டது. இதனால் யாரும் …

கொரோனா தாக்குதல் எதிரொலி: பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் தள்ளிப்போகிறது

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி நடந்து முடிந்தது. 8 லட்சம் மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு எழுதும் போதே கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனால் பிளஸ்-1 தேர்வில் ஒரு பரீட்சையும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முழுமையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியும் ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 31-ந்தேதி விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்குவதாக இருந்தது. 44 மையங்களில் 20 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட …

சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு

சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது. மேலும் கொரானா அதிகம் பாதிப்புள்ள பகுதியை வெளியிட்டு உள்ளது. சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு சென்னை மாநகராட்சி சென்னை சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாளை முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை சென்னையில் அனைத்து வகையான இறைச்சிக் கடைகளையும் மூடவேண்டும். உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் …

தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. இன்று (ஏப்.,03) ஒரே நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று(ஏப்.,2) வரை 309 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் தேசிய அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தமிழகத்தில், 3,684 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் 2,789 பேருக்கு கொரோனா இல்லை. 411 பேருக்கு …

‘இஸ்லாமை போல் மார்க்சியமும் அடிப்படை வாத மதம் தான்:’ எச்.ராஜா பதிலடி

  சென்னை: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை, ‘ஏப்., 5ம் தேதி இரவு 9:00 மணிக்கு, 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அனைத்து மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்’ என, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். ‘இந்த அறிவிப்பு கொரோனா வைரசை அழிக்காது’ எனக்கூறி, பிரதமர் மோடியை, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. சி.பி.எம்., கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர், டி.கே.ரங்கராஜன், ‘நோய்நொடிகள் வெம்புலி போல், நூறுவிதம் சீறு …

44 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும்: முதல்வர் இ.பி.எஸ்.,

சென்னை: அத்தியாவசியமின்றி மக்கள் வெளியே வந்தால், 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களை முதல்வர் இ.பி.எஸ்., ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதி செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள தொழிலாளர்களை சந்தித்தேன். வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்து தமிழகத்தில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்துள்ளது. உணவு,உடை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் …

டில்லி மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர் விசா ரத்து

புதுடில்லி: டில்லியில், தப்லிக் – இ – ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. டில்லியில், நிஜாமுதீன் பகுதியிலிருக்கும், தப்லிக் – இ – ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மார்ச், 8 – 10ம் தேதிகளில், பிரசங்க கூட்டம் நடந்தது. இதில், நம் நாட்டில் இருந்தும், மலேஷியா, வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ‘ஓரிடத்தில் அதிகமானோர் கூடக் கூடாது’ என, டில்லி போலீசார் …

கரோனாவுக்கு அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிப்பு!

புதிதாக கரோனா வைரஸ் தடுப்பு மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை எலிகளுக்குச் செலுத்திப் பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தியிருப்பது அறியப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான இந்த ஆய்வின் முடிவு பற்றி இபயோமெடிசின் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிட்கோவேக், அதாவது பிரிட்ஸ்பர்க் கரோனா வைரஸ் வேக்சின், என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த மருந்தை எலிகளுக்குச் செலுத்திப் பரிசோதித்ததில், கரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு ஆற்றலை இரு வாரங்களிலேயே அவை மிக அதிகளவில் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கரோனா …