சென்னை : சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கவும் மருந்துகளை வழங்கவும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து இன்று(ஏப்.,3) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. …
இத்தாலியில் குறைந்து வரும் கொரோனாவின் வேகம்
ரோம் : இத்தாலியில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தற்போது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் பரவிய கொரோனா சீனாவையடுத்து பல நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. இதில் இத்தாலியில் பாதிப்பு சற்று அதிகமாகவே இருந்து வந்தது. தினமும் ஆயிரக் கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் …
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: சுகாதார செயலர்
சென்னை: கொரோனா பாதிப்பில், தமிழகம் இரண்டாவது நிலையில் தான் உள்ளதாகவும், சமூக பரவலாக மாறவில்லை என சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கண்காணிப்பின் கீழ் 90,415 பேர் உள்ளனர். வீடு முடிந்து 5080 பேர் திரும்பியுள்ளனர். 3,684 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நேற்று வரை 309 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இன்று 102 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை …
கொரோனா: சீனாவிடம் இழப்பீடு கேட்கும் சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் மனு
லண்டன்: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ காரணமாக இருந்த சீனாவிடம் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிபதிகள் கவுன்சில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலை அணுகி உள்ளது இது குறித்து சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் கூறுகையில் ‘ கொரோனாவை உலக அளவில் பரப்ப காரணமாக இருந்த சீனா உலக அளவில் மக்களிடையே மன அழுத்தத்தையும் சமூக பாதிப்பையும், உலக பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிப்பு அடைய செய்துள்ளது. இது தொடர்பாக சீனா உலக நாடுகளுக்கு இழப்பீடு …
ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு: ஊரடங்கு உத்தரவு படிப்படியாகவே தளர்த்தப்படும் வாய்ப்பு
ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு உடனடியாக தளர்த்த்ப்படாது. படிப்படியாகவே தளர்த்தப்படும். புதுடெல்லி இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 56 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவைப் பொருத்தவரை தமிழகத்தில் தொடக்கத்தில் நிலைமை ஓரளவு கட்டுக்குள்தான் இருந்தது என்றே கூறலாம். அரசாங்கத்தின் கூற்றுப்படி, மார்ச் 14 ஆம் தேதி நடந்த டெல்லி நிஜாமுதீன் கூட்டம் காரணமாக கொரோனா வைரஸ் …
காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் செல்பி எடுத்து அனுப்பினால், மருத்துவக்குழு வீடு தேடி வரும் – கொரோனா குறித்த புதிய செல்போன் செயலி அறிமுகம்
கொரோனா குறித்த தகவல் பறிமாற்றத்துக்காக புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருமல், காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறி இருப்பவர்கள், செல்போனில் செல்பி எடுத்து அனுப்பினால் மருத்துவக்குழு வீடு தேடி வந்து உதவி செய்வார்கள். சென்னை, கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளிவில் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவசர கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவக்குழுவினரால் தினமும் கண்காணிக்கப்பட்டு …
ஆபாச நடத்தை: தப்லிக் ஜமாத் உறுப்பினர்களின் சேவையில் ஆண் சுகாதார ஊழியர்கள்- போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள்
ஆபாச நடத்தையால் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களின் சேவையில் ஆண் சுகாதார ஊழியர்கள் மற்றும் போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள் என உத்தரபிரதேச அரசு கூறி உள்ளது. காசியாபாத் டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து அப்புறபடுத்தபட்டு கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். அந்த வகையில் மாநாட்டுக்கு சென்ற வந்த 6 பேர் காசியாபாத் எம்எம்ஜி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.. தனிமை வார்டில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஆனால் அங்கு சிகிச்சைபெறும் 6 பேரும் ஆஸ்பத்திரி …
கடந்த 2 நாட்களில் நிஜாமுதீன் தொடர்புடைய 647 கொரோனா பாதிப்புகள் 14 மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
கடந்த 2 நாட்களில் நிஜாமுதீன் தொடர்புடைய 647 கொரோனா பாதிப்புகள் 14 மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. புதுடெல்லி டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர்கள் மூலம் பலருக்கும் பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இவர்களில் 300 க்கும் மேற்பட்ட தப்லிகி ஜமாஅத் ஆர்வலர்கள் …
மூக்கு வழியாகசெலுத்தும் கொரோனா தடுப்பூசியை தயாரித்து பரிசோதனைகளை நடத்துகிறது பாரத் பயோடெக்
பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசி தயாரித்து மருத்துவ பரிசோதனைகளை நடத்துகிறது. உலகளாவிய விநியோகத்திற்காக கிட்டத்தட்ட 30 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க உள்ளது. புதுடெல்லி தடுப்பூசி தயாரிப்பாளர் பாரத் பயோடெக் அமெரிக்காவைச் சேர்ந்த தடுப்பூசி நிறுவனமான ஃப்ளூஜென் மற்றும் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்டுகளுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக ஒரு தனித்துவமான இன்ட்ரானசல் தடுப்பூசியை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. பாரத் பயோடெக் தடுப்பூசி தயாரிக்கும், மருத்துவ பரிசோதனைகளை நடத்துகிறது. உலகளாவிய விநியோகத்திற்காக கிட்டத்தட்ட 30 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க உள்ளது. …
கரோனா தொற்று: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்கள்
து தில்லி: தமிழகத்தில் புதிதாக 102 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,300 ஆகவும், உயிர் பலி 56 ஆகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 336 …