தொடர் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளின் பதிவு ரத்து செய்யப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

தாய்-சேய் நலன் மற்றும் நீண்டகால நோய்க்கு தொடர் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளின் பதிவு ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னை, இதுகுறித்து தமிழக மருத்துவ மற்றும் ஊரக மருத்துவ சேவை இயக்குனர், மாவட்ட கலெக்டர்கள், மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாநிலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளும், குழந்தை பிறப்பு, தாய்-சேய் நலன் …

கரோனா தொற்று இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடுகள் உள்ளன

உலகம் முழுவதும் கொரோனா கோரதாண்டவம் ஆடி வரும் நிலையிலும் கொரோனாவை பற்றி தெரியாத நாடுகள், கண்டு கொள்ளாத நாடுகள் உள்ளன சியோல் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் நடுங்கி வரும் நிலையில், இந்த வைரஸ் காரணமாக ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடுகளும் உள்ளது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகையே மிரட்டி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் இருக்கிறது. இந்த வைரஸ் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 39,566 பேர் …

உலகம் முழுவதும் கொரோனா பலி 53 ஆயிரத்தை தாண்டியது; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது. பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியது. வாஷிங்டன், சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. என்னதான் நடவடிக்கை …

திவாலாகும் நிலையில் விமான நிறுவனங்கள்: அரசின் ஆதரவு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்

திவாலின் விளிம்பு நிலையில் விமான நிறுவனங்கள் இருப்பதாக கூறி, அரசின் உதவியை நாடி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இந்திய வர்த்தக, தொழில் சம்மேளனம் கடிதம் எழுதி உள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கத்துடன் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று பல்வேறு வெளிநாடுகளும் தடை விதித்து உள்ளன. இதன் காரணமாக எல்லா விதமான பயணிகள் போக்குவரத்து சாதனங்களும் முடக்கப்பட்டுள்ளன. அனைத்து விமானங்களும் உள்நாட்டு …

ஊரடங்கு கால சிறப்பு நிவாரணம்; 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.500 – மத்திய அரசு செலுத்தியது

ஊரடங்கு கால சிறப்பு நிவாரணமாக 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் மத்திய அரசு ரூ.500 செலுத்தியது. புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு 25-ந் தேதி முதல் அமல்படுத்தியது. இதன் காரணமாக சாதாரண கூலி தொழிலாளர்கள் தொடங்கி அனைத்து தொழில் துறையினரும், வியாபாரிகளும், தனியார் துறையினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். பலதரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கடந்த 26-ந் …

ஆண்களை குறிவைத்து தாக்கும் கொரோனா வைரஸ்

சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து உருவான கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை பாதித்துள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டு உள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் பாலின விகிதம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் பெண்களை விட ஆண்கள் மூன்று மடங்கு பலியாவதாக கண்டறியப்பட்டுள்ளது. உயிர்பலியாகும் பெண்களின் எண்ணிக்கை 3.4 சதவீதமாக இருக்கும்பட்சத்தில் ஆண்களின் பலி எண்ணிக்கை 9.2 ஆக காணப்படுகிறது. இது தவிர கொரோனா பாதித்த இத்தாலி, ஸ்பெயின், …

பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்: மம்தா

கோல்கட்டா: பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி கொரோனா தொடர்பாக வெளியிட்ட வீடியோ குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். நேற்று பிரதமர் மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் ‘கொரோனா வைரசை தோற்கடிக்க நாளை (ஏப்.5ம் தேதி) இரவு, 9:00 மணிக்கு, 9 நிமிடங்கள், மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து, தீபம், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, மொபைல் போன் விளக்கு களை …

ஊரடங்கை மீறி கர்நாடகாவுக்குள் நுழைந்த வாலிபர்கள்; தடுத்த போலீஸ்காரர் கல்வீச்சில் காயம்

கேரளாவில் இருந்து கர்நாடக எல்லைக்குள் ஊரடங்கை மீறி நுழைந்த வாலிபர்களை தடுத்த காவல் அதிகாரி கல்வீச்சில் காயம் அடைந்து உள்ளார். பெங்களூரு, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் 24ந்தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று நள்ளிரவு முதல் வரும் 14ந்தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதனால் பொதுமக்கள் வீடுகளை …

நெல்லையில் கரோனா பாதிப்பு 36ஆக உயர்வு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 36ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேரும் தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தனிமைச் சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. இதில் தனிமை சிகிச்சை பிரிவு, கண்காணிப்பு பிரிவு, ஆய்வு …

சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு; பிரதமர் அறிவிப்பு

  சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். சிங்கப்பூர், சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக வரும் 7ந்தேதி முதல் அடுத்த 1 மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என அந்நாட்டின் பிரதமர் லீ சீன் லூங் அறிவித்து உள்ளார். அதனால் அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளை தவிர்த்து பெருமளவிலான பணியிடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு …