உத்தரபிரதேசத்தில், ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஊழியர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். லக்னோ, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது தெரியவந்து உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்றவர் கள் உத்தரபிரதேசம், தெலுங் கானா, ஆந்திரா, தமிழ்நாடு …
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது வீட்டை விட்டு வெளியே வந்தால் ‘முக கவசம் அணிவது கட்டாயம்’ – மத்திய அரசு அவசர உத்தரவு
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. புதுடெல்லி, உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நோய்க்கிருமி பரவும் வேகத்தை முழுமையாக கட்டுப் படுத்த முடியவில்லை. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3 …
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை
தமிழகத்தில் கோடைவெயில் மக்களை வாட்டி வந்தது. இந்நிலையில் மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பெய்தது மதுரையில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடிமற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இடி மின்னலுடன் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
கொரோனா:சீனாவில் 95 போலீசார், 45 மருத்துவ ஊழியர்கள் பலி
பீஜிங்: சீனாவில் கொரோனா வைரசுக்கு 95 போலீசார் 45 மருத்துவ ஊழியர்கள் பலியாகி உள்ளதாக சீன நாட்டின் அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இதனையடுத்து வைரஸ் சிகிச்சையை குணப்படுத்த தீவிரம் காட்டி வந்தது.சீன அரசு. இதற்காக 42 ஆயிரம் மருத்துவ ஊழியர்களை களம் இறக்கப்பட்டனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 14 தற்காலிக மருத்துவமனைகளை கட்டியது. வூஹான் மாகாணத்தில் 812639 பேர் …
அமெரிக்காவுக்கு மீண்டும் சோதனை மிரட்டும் இரு புயல்கள்
கலிபோர்னியா: கொரோனா வைரஸ் அமெரிக்காவை நிலைகுலைய வைத்துள்ள நிலையில், அடுத்து வரக்கூடிய இரு புயல்கள் கலிபோர்னியா மாகாணத்தை புரட்டிபோட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முதல் புயல் சனிக்கிழமை(ஏப்.4) கரைக்கு வந்து மாநிலத்தின் வடக்குபகுதியில் மூன்றில் இரண்டு பகுதிக்கு கடுமையான மழை பெய்யும், பின்னர் சியரா மற்றும் வடக்குகலிபோர்னியா மலைகளுக்கு இடைப்பகுதியில் பனி மழையை கொண்டுவரும். பின்னர் கிழக்கு நோக்கி நகர்ந்து பனி மழையை தரும்.. இரண்டாவது புயல் மேலும் சக்திவாய்ந்ததாகத் தோன்றி ஞாயிற்றுக்கிழமை(ஏப்.5) கரைக்கு வருகிறது, அப்போது …
கொரோனாவுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் 15 பேர் பலி
வாஷிங்டன்: கொரோனாவுக்கு அமெரிக்காவில் 6 இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும், 15 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். கொடிய ‘கொரோனா’ வைரஸ், உலகம் முழுவதும் பரவி உயிர் பலி வாங்கி வருகிறது. உலகளவில் இதுவரை 11.88 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 64,103 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 15 பேர் கொரோனா தாக்கி பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் 6 இந்தியர்களும், இத்தாலியில் 5 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்சில் 2 பேர், ஈரான், …
பிரதமர் மோடியை ஆதரிக்கும் காங்., தலைவர்கள்
புதுடில்லி: மத்திய அரசின், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை, காங்., மூத்த தலைவர்கள் பாராட்டி வருவது, கட்சி மேலிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மத்திய அரசு பிறப்பித்துள்ள, 21 நாள் ஊரடங்கு குறித்து, காங்., தலைவர் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர், விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மக்கள் ஊரடங்கின் போது, கைகளை தட்டுமாறு, பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை, ராகுல் கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசை, எப்போதும் விமர்சித்து வரும் முன்னாள் …
ஆய்வகங்களை அதிகரிக்காமல் கரோனா பரவலை கட்டுப்படுத்த இயலாது
தமிழகத்தில் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்று சுகாதார ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதனை அதிகரித்தால் மட்டுமே மாநிலத்தில் கரோனா பாதிப்பு சமூகத் தொற்றாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிய முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தற்போதுள்ள சூழலில் மாநிலத்தில் 17 ஆய்வகங்கள் உள்ளன. அவற்றில் 11 அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்தும் தனியார் ஆய்வகங்கள். சுகாதாரத் துறைச் செயலர் அளித்த தகவல்படி, ஓர் ஆய்வகத்தில் நாள்தோறும் நூறு மாதிரிகள் வரை பரிசோதனை செய்ய …
இந்தியாவில் முதல் முறை.. கரோனா பாதித்த பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது
புது தில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவருக்கும், அவரது கர்ப்பிணி மனைவிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனி வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கர்ப்பிணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே பிரசவம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். கரோனா பாதித்த கர்ப்பிணியும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவராவார். தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள். குழந்தைக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஆரோக்கியமாக இருக்கிறது. ஆனால் குழந்தையின் உடல்நிலை …
தமிழகத்தில் கைது எண்ணிக்கை 57 ஆயிரமாக உயர்வு: ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – போலீசார் எச்சரிக்கை
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இனிமேல் போடப்படும் வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் கடுமையான சட்டம் பாயும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் அந்த உத்தரவை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுகிறார்கள். கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இனிமேல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடுமையான …